மது குடிக்காதீர்கள் என பள்ளி மாணவிகள் சென்ற விழிப்புணர்வு பேரணியை பாட்டி ஒருவர் கிண்டல் செய்யும் விதமாக பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கினை கொண்டு வருவோம் என கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தார். இந்த, அரசு அமைந்து 2 ஆண்டுகளை வெகுவிரைவில் பூர்த்தி செய்ய உள்ளது. எனினும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இப்படிப்பட்ட சூழலில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் சாலையில் மதுவிலக்கு பிரச்சாரம் செய்து கொண்டு சென்றுள்ளனர். அப்போது, இந்த பேரணியை கடந்து சென்ற பாட்டி ஒருவர், இவர்களே கடையை திறப்பார்களாம்? பிறகு குடியை குடிக்காதீர்கள் என்று சொல்வார்களாம். சிங்கம் புணரியில் 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது என்று அந்த பாட்டி கூறிய படி நகர்ந்து சென்ற சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.