Share it if you like it
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம், உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது ;
கிருஷ்ணகிரி, சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து, ஓசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த விடியா அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
கண்ணீர் புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி. மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த நிர்வாக திறமையற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Share it if you like it