2,675 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி..!  இந்த வரலாற்று சாதனையை மறைக்க தி.மு.க-விற்கு துணை போகிறாரா நடிகர் சூர்யா?

2,675 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி..! இந்த வரலாற்று சாதனையை மறைக்க தி.மு.க-விற்கு துணை போகிறாரா நடிகர் சூர்யா?

Share it if you like it

நீட் தேர்வில் வரலாற்று சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்.

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தையும், பயத்தையும், உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட தி.மு.க, விசிக, கம்யூ, காங்கிரஸ், மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் பிரிவினை சக்திகள் இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறது என்பது அனைவரும் அறிந்தே.

தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரும் பிரபல நடிகருமான சூர்யா, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையும், ஊக்கத்தையும், கொடுக்காமல், அரசு பள்ளி மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பீட்டு தொடர்ந்து அவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிய நடிகர் சூர்யாவிற்கு. சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக நீட் தேர்வில் வரலாற்று சாதனை படைத்து உள்ளனர் அரசு பள்ளி மாணவர்கள். இது குறித்த புள்ளி விவரத்தை பிரபல அரசியல் விமர்சகர் கிருஷ்ண குமார் முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களின் சாதனையை மறைக்கும் விதமாகவும், மக்களின் முழு கவனத்தை ’ஜெய் பீம்’ பக்கம் திருப்ப திமுக, சூர்யா, ஏன்? திட்டம் போட்டு இருக்க கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it