அமைச்சர் கே.என். நேருவின் பச்சை பொய்யை தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்திய பிரபல பத்திரிக்கையாளர் – சந்தியா ரவிசங்கர்..!

அமைச்சர் கே.என். நேருவின் பச்சை பொய்யை தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்திய பிரபல பத்திரிக்கையாளர் – சந்தியா ரவிசங்கர்..!

Share it if you like it

சென்னையில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி விட்டோம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் கருத்து.

பருவ மழை துவங்கும் முன்பே சென்னையில் உள்ள கால்வாய்களை, முதல்வரின் வழிகாட்டுதல் படி நாங்கள் தூர்வாரி உள்ளோம். என நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை ஓய்ந்த பின்பே கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் உட்பட பலர் மிக கடுமையான குற்றச்சாட்டை திமுக அரசு மீது சுமத்தி வரும் நிலையில். பிரபல அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர், என பன்முகத்தன்மை கொண்ட சந்தியா ரவிசங்கர் அவர்கள். தி.நகர் பகுதிக்கு நேரடியாக சென்று, அங்குள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்து தமிழக மக்களுக்கு உண்மை நிலையை அம்பலப்படுத்தி இருப்பதன் மூலம், கால்வாய்களை தூர்வாரினோம் என்று கூறிய அமைச்சர் கே.என். நேருவின் பச்சை பொய் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it