தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் பகவான் கிருஷ்ணரை இழிவுப்படுத்தி பேசிய சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதுதான் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உதாரணமாக, தி.மு.க. தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர்கள் நெற்றியில் இட்ட விபூதி, குங்குமத்தை அங்கேயே அழித்து அவமானப்படுத்தினார். மேலும், இஸ்லாமிய திருமணத்திற்குச் சென்றிருந்த அவர் ஹிந்து திருமண சடங்குகளைப் பற்றி அவதூறாகப் பேசி அசிங்கப்படுத்தினார்.
அதேபோல, ஸ்டாலின் தங்கையும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி எம்.பி., திருப்பதி கோயிலில் உண்டியலை காப்பற்றிக் கொள்ள முடியாமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வெங்கடாஜபதியா மக்களை காப்பாற்றப் போகிறார் என்று பொதுக்கூட்டத்தில் பேசி, ஹிந்து கடவுளை அவமானப்படுத்தினார். இப்படி, தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் ஹிந்து கடவுள்களையும், ஹிந்து மத சடங்குகளையும் அசிங்கப்படுத்துவதையும், அவமானப்படுத்துவதையும், அவதூறாகப் பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், தி.மு.க.வைச் சேர்ந்த தர்மபுரி தொகுதியின் எம்.பி. செந்தில்குமார், கோடிகணக்கான ஹிந்துக்கள் வணங்கும் பகவான் கிருஷ்ணை அவமதித்து பேசியிருக்கிறார். இந்தகாணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரது, பேச்சு, செயல்பாடுகள் அனைத்தும் ஹிந்துக்களுக்கு எதிராகவே இன்று வரை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.