வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் பா.ஜ.க தலைவர் கடும் எச்சரிக்கை..!

வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் பா.ஜ.க தலைவர் கடும் எச்சரிக்கை..!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தி.மு.க மீது பாய்ச்சல்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, ஆட்சி முறை, எவ்வாறு இருந்து வருகிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் இன்று வரை பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். தி.மு.க ஆட்சியில் அமர்ந்து 1 ஆண்டு கூட நிறைவு பெறாத நிலையில் பல குற்றச்சாட்டுகள் தி.மு.க மீது விழுந்த வண்ணம் உள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

மின்சாரத்தில் ஊழல், இனிப்பில் ஊழல், என தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பா.ஜ.க-விற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் எங்களை மிரட்ட நினைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் என்று அக்கட்சிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.


Share it if you like it