புதுக்கோட்டையை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்து கோவில் மீதும் தாக்குதல்..! தொடரும் ஹிந்து விரோத போக்கு..!

புதுக்கோட்டையை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்து கோவில் மீதும் தாக்குதல்..! தொடரும் ஹிந்து விரோத போக்கு..!

Share it if you like it

  • முருக பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும், அறுவருக்க தக்கவகையில் பேசி. கோடிக்கணக்கான ஹிந்துக்களின், உணர்வுகளை, புண்படுத்தும் விதமாக பேசிய சுரேந்திரனுக்கு. அதிக முக்கியத்துவத்தை, தி.மு.கவின் சன் ஊடகம் அண்மையில் வழங்கியது.
  • ஈஷா யோகா மையத்தின் மீது விசாரணை நடத்தப்படும் என்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்மையில் கருத்து தெரிவித்தது. என தி.மு.க மெல்ல, மெல்ல, ஹிந்து விரோத நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொள்கிறதோ என்னும் அச்சம் தற்பொழுது ஹிந்துக்கள் மத்தியில் எழ துவங்கியுள்ளது.

அண்மையில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.

 விராலிமலை முருகன் கோவில் மலைபாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கும் காட்சியைக் கண்டு மனது உடைந்து நொறுங்கிப் போனேன். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.இந்த இழிவான செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விடியல் ஆட்சியில் ஹிந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தற்பொழுது எழுந்து இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். .


Share it if you like it