திமுக என்ற கட்சி உருவானதே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கில் தான் – திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திமுக என்ற கட்சி உருவானதே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கில் தான் – திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Share it if you like it

திமுக என்ற கட்சியே இந்து சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற இலக்கோடு தான் உருவாக்கப்பட்டது. அதனால் ஆட்சியே பறிபோனாலும் எங்களுக்கு அதை பற்றி கவலை இல்லை. சனாதன தர்மத்தை ஒழித்தே தீருவோம் என்று தமிழகத்தின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் சென்னை சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும் திமுகவின் இளைஞர் அணி தலைவருமான மாநில முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு விஷயங்களில் திமுகவின் நிலைப்பாடுகளை முன்னிறுத்தி திமுகவின் இந்து விரோதம் குறித்து பாஜக கட்சி மற்றும் பல்வேறு இந்து அமைப்புக்கள் தொடர்ச்சியாக கடுமையான விமர்சனமும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வந்தது. தேர்தல் நேரத்தில் அது மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிரான மனநிலையை உருவாக்கி விடும் என்ற அச்சத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரங்களில் இதே திமுகவினர் திமுகவை ஒரு இந்து விரோத கட்சியாக கட்டமைக்க பார்க்கிறார்கள். பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் திமுகவை ஒரு இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள் என்று மேடை தோறும் திமுகவின் தலைவரும் அதன் கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வந்தார்கள் . திமுக இந்துக்களுக்கு விரோதமான கட்சி அல்ல .திமுகவிலும் ஆன்மீகவாதிகள் உண்டு. திமுக தான் உண்மையில் இந்துக்களுக்கு ஆதரவான கட்சி. திமுகவில் இருக்கும் 90% உறுப்பினர்கள் இந்துக்கள் தான் .அது ஒன்றே திமுக எந்த அளவிற்கு இந்துக்களை அரவணைத்து போகும் கட்சி என்பதற்கு சாட்சியம் என்று ஆளாளுக்கு அள்ளி விட்டார்கள். பெருவாரியான மக்களை நயமாக பேசி ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்த உடனேயே திமுகவின் உண்மை முகம் வெளிப்படத் தொடங்கியது. திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெரியாருக்கு கிடைத்த வெற்றி என்று திராவிடர் கழக தலைவர் தொடர்ச்சியாக நிலைநிறுத்த முயன்றார் . மேலும் சனாதன எதிர்ப்பு மாநாடு – சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பெரும்பான்மை இந்து மக்களையும் பெரும்பான்மை மக்களின் வாழ்வியல் வழிபாடு முறையான சனாதன தர்மத்திற்கு எதிராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை திக அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகள் விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பட்டது. அதில் திக மற்றும் திமுக வினர் கலந்து கொண்டு வெளிப்படையாக சனாதன தர்மத்திற்கும் அதன் வழியில் வாழும் பெரும்பான்மை இந்து மக்களுக்கும் எதிரான கருத்துக்களை பொது மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால் போகும் இடங்களில் எல்லாம் மேடை தோறும் இந்துக்களுக்கு எதிராக பேசுவதும் பலத்த எதிர்ப்பு அல்லது கடுமையான அரசியல் நெருக்கடி வந்தால் நாங்கள் அப்படி பேசவில்லை. இப்படித்தான் பேசினோம் . அதை திரித்து எழுதி விட்டார்கள் அல்லது பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்து அமைப்புகள் திமுகவின் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதாக கூறி தப்பித்துக் கொள்வார்கள். இதுவே கடந்த இரண்டு ஆண்டுகளாக காலமாக திமுகவின் வழக்கமாக இருக்கிறது.

ஆனால் சில வாரங்கள் முன்பு தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பினர் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சரும் பங்கேற்றதும் அந்த தலைப்பை பெருவாரியாக புகழ்ந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக பேசியதும் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது . ஆனால் அவர் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் நிச்சயம் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் திமுக என்ற கட்சியை இந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது அதனால் ஆட்சி போனாலும் கவலை இல்லை என்று மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

தமிழ் – தமிழர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு கட்சி தமிழ் – தமிழர் என்ற பெயரில் இன மொழி வாதம் பேசி வளர்ந்து அரியணை அமர்ந்த கட்சி திமுக. அந்த வகையில் இலங்கையில் இறுதி யுத்தம் மூண்ட போது தமிழகத்தில் மாநில அரசு கட்டிலில் திமுக தான் இருந்தது. அதன் தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போதைய மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு ஜனநாயக கூட்டணி கட்சியிலும் திமுக அங்கம் வகித்தது மத்தியிலும் பெரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமும் கூட்டணி அரசில் பல்வேறு முக்கிய அமைச்சர் பதவிகளையும் வைத்துக்கொண்டு மத்திய அரசியலும் முழு ஆட்சி அதிகாரத்தை செலுத்தி வந்தது திமுக. ஆனால் ஈழத்தில் இறுதி யுத்தத்தில் சுமார் 2 லட்சம் அளவிலான தமிழர்கள் ஆண்கள் – பெண்கள் – குழந்தைகள் என்று பாகுபாடு இல்லாமல் கொடூரமாக கொல்லப்பட்ட போது தமிழ் – தமிழர் என்ற நலன் விரும்பும் திமுக கட்சி இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதற்காக ஆட்சியை இழக்க தயாராக இருக்கிறது என்று வார்த்தைகளை யாரும் உதிர்க்கவில்லை. மாறாக நானே ஒரு அடிமை . நான் எங்கே இன்னொரு அடிமைக்கு விடுதலை வாங்கித் தர முடியும் ? என்று பாசாங்கு பேசி பரிதாபத்தை தேடினார் அப்போதைய திமுக தலைவரும் முதல் வருமான கருணாநிதி.

நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கிறது .மேலும் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு விலக்கு கேட்டாலும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் . திமுகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்துங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நீட் தேர்வு ரகசியத்தை வைத்து அதை முழுமையாக ரத்து செய்து விடுவோம் என்று தேர்தலில் மேடைக்கு மேடைப் பிரச்சாரம் செய்தார் உதயநிதி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் முன்வைத்த இந்த நீட் ரத்து செய்யும் ரகசியம் குறித்த பிரச்சாரம் பெரிய அளவில் அவருக்கு ஆதரவை பெற்று தந்தது .அதன் மூலம் இன்று அவர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர். அவர்களது கட்சி ஆட்சி கட்டிலில் இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளும் நீட் தேர்வை வைத்து அவர்கள் மலிவான அரசியல் மட்டுமே செய்து வருகிறார்கள். இனி எந்த காலத்திலும் நீட் தேர்வை தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்கவோ அல்லது ரத்து செய்யவும் முடியாது என்பது தெளிவாக தெரிந்த பிறகும் கூட அதை வைத்து மாணவர்கள் மத்தியில் விஷம பிரச்சாரம் செய்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் அதிமுகவை துணைக்கு அழைத்து இரண்டு கட்சிகளும் ஒன்றாக போய் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் செய்து நீட் தேர்வை ஒழித்து விடலாம் என்று வழித் துணைக்கு அதிமுக வை கூப்பிடுகிறார்கள். ஆனால் இந்த நீட் தேர்வு எதிர்ப்பு தமிழகத்திற்கு மற்றும் நீட் தேர்வு விலக்கு வேண்டி நாங்கள் ஆட்சியை இழக்க தயாராக இருக்கிறோம் என்று உதயநிதி இதுவரை எங்கும் பேசியது இல்லை.

தமிழகம் முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளது . தேசிய பாதுகாப்பு முகமை தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் சோதனை விசாரணை கைது என்று நடவடிக்கை எடுத்து வருகிறது . கோவையில் ஒரு பெரும் தற்கொலைத் தாக்குதல் முயற்சி இறையருளால் தவிர்க்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. காவல்துறையின் உயர் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவில் பெரும் பணிச்சுமையும் மன உளைச்சலும் மர்மமான அச்சுறுத்தல்களும் தொடர்வதை சாமானியர்களும் உணர முடிகிறது. சமீபத்தில் ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தென்னிந்திய தலைவராக திருச்சூர் கேரளாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு பெரும் சர்வதேச பயங்கரவாதியை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வைத்து என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். இதே சென்னையில் ஒரு போதை மாத்திரை பத்தாயிரம் ரூபாய் வீதம் தங்கும் விடுதிகள் கடற்கரை ரிசார்ட்டுகள் பொழுதுபோக்கு மையங்கள் என்ற பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை விற்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த 10 பேர் கொண்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கும்பலை என் ஐ ஏ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெருமளவில் கள்ளத்தனமாக கடல் வழியே ஊடுருவல்களும் போதை ஆயுதங்கள் என்று கடத்தல் சம்பவங்களும் நடைபெறுவதாக கிடைத்த மத்திய உளவுத்துறை அறிக்கை மூலம் மத்திய அரசு கடுமையான கண்காணிப்பு விசாரணைகளை நடத்தி வருகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து மாநிலத்தின் பாதுகாப்பு மக்களின் நலனை உறுதி செய்ய தேவையான கடுமையான நடவடிக்கைகளை இதுவரையில் மாநில அரசு எடுக்கவில்லை. அதன் காரணமாக எந்த ஒரு தெளிவான அறிக்கையோ விளக்கமும் கூட இதுவரையில் வந்ததில்லை. ஒருவேளை இந்த பாதுகாப்பு விஷயங்களில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க போய் அதன் காரணமாக நாங்கள் ஆட்சியை இழக்கிறோம் என்றால் கூட அதை திமுகவினர் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க முடியும். நாங்கள் நாட்டின் பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விஷயங்களில் கடுமை காட்டியதால் ஆட்சியை இழக்க நேரிட்டது என்று .அது வரலாற்றில் அவர்களுக்கு ஒரு கௌரவத்தை தேடிக் கொடுத்திருக்கும்.

திமுகவின் தலைமை குடும்ப உறுப்பினர்கள் முதல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பெரும் அளவில் சொத்துக்களை குவித்திருக்கும் பட்டியல் ஆதாரப்பூர்வமாக வெளிவந்தது டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் ஆதாரங்களோடு அதை ஆவணப்படுத்தி மாநில ஆளுநர் உள்ளிட்டவர்களிடம் முறையாக ஒப்படைத்தார் அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சார்ந்த மத்திய அமைப்புகள் அதிகாரிகள் குழு திமுகவின் அமைச்சர்கள் நிர்வாகிகளின் வீடுகளில் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் எல்லாம் சோதனை விசாரணை கைது நடவடிக்கை எடுத்து வருகிறது திமுகவின் முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருந்த தலைமை குடும்பத்திற்கு நெருக்கமானவராக அறியப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது இலாக இல்லாத அமைச்சராக தொடர்ந்தாலும் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறார் இந்த விஷயங்களை எல்லாம் முன் வைத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விளக்கமும் இதுவரையில் திமுகவின் தலைமை கொடுத்ததில்லை மாறாக இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகுகிறோம் என்றும் அறிக்கை விட்டதில்லை. ஒருவேளை இதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள் என்றால் அதன் காரணமாக நாங்கள் ஆட்சியை இழக்க தயாராகிறோம் . அதுவே எங்களின் நேர்மைக்கு சாட்சியாக இருக்கும் என்று வார்த்தைக்கு கூட யாரும் இதுவரை பேசியது இல்லை.

இலங்கையின் ஈழ யுத்தம் நீட் தேர்வு மக்களின் நலம் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் எவ்வளவு எதிர்ப்புகள் விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படாமல் இருந்தவர்கள். ஆட்சியில் முக்கிய அமைச்சர்கள் நிர்வாகிகள் மீது கோடிக்கணக்கில் ஊழல் புகார்கள் ஆதாரத்தோடு வெளிவந்து அவர்கள் மீது விசாரணை கைது வழக்கு என்று சட்டத்தின் பிடி இருக்கும்போதும் அதைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் அமைதியாக கடந்து போனவர்கள். இந்து தர்மத்தை அழிப்பது தான் முதல் இலக்கு அதற்காக ஆட்சி பறிபோனாலும் கவலை இல்லை என்று சொல்வார்கள் ஆனால் திமுகவில் இருக்கும் நெற்றியில் திலகம் விபூதி அணிந்து நாங்களும் இந்துக்கள் தான் என்று சொல்லிக் கொள்ளும் ஒட்டுமொத்த இந்துக்களையும் உதயநிதி அவமதித்து இருக்கிறார் என்று அர்த்தம். அந்த வகையில் அவர் அவர்களையும் மனிதர்களாக கூட மதிக்கவில்லை. அவர்களின் உணர்வுகள் ஆன்மீக நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். இவ்வளவு நடந்த பிறகும் தங்களின் சுய ஆதாயம் பதவி அதிகாரம் தான் முக்கியம் என்று அமைதி காப்பார்கள் ஆனால் உண்மையில் திமுகவில் இருக்கும் இந்துக்கள் இனி வெறும் சான்றிதழ் அடிப்படையிலான இந்துக்களாகவே மட்டுமே இருக்க முடியும். அவர்கள் மனதளவிலும் உணர்வு ரீதியாகவும் ஆன்மீகவாதிகளாகவோ இந்துக்களாகவோ அடையாளப்படுத்தப்படும் அருகதையை இழந்தவர்கள் என்று அர்த்தம்.

கோவை சம்பவத்தை இன்று வரை சிலிண்டர் வெடிப்பு என்று மூடி மறைக்கிறார்கள். பல்வேறு விஷயங்களில் கள்ள மவுனம் காக்கிறார்கள். நான் ஒரு கிறிஸ்தவன். எனது மனைவியும் ஒரு கிறிஸ்தவர் என்று பொது மேடையில் பெருமையாக பேசியவர் தான் இந்த உதயநிதி. அதே திமுகவின் அமைச்சர் உதயநிதி வந்து இன்று திமுக ஆட்சி பறிபோனாலும் பரவாயில்லை. சனாதன தர்மத்தை ஒழிப்பது தான் எங்களின் குறி என்று சொல்வாரானால் உண்மையில் அவர்களின் ஆட்சி மட்டும் பறிக்கப்பட வேண்டியது அல்ல . ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அதன் வழியில் வாழும் மக்களுக்கும் எதிராக துவேஷம் பேசும் அரசியல் கட்சி என்ற வகையில் திமுகவின் கட்சியும் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டிய கட்சியே. மாநில நலனும் மக்களின் பாதுகாப்பும் பல்வேறு மதங்கள் மொழிகள் இனங்கள் பேசும் வாழும் நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் விதமாக மத வெறுப்பு அரசியல் சனாதன விரோதம் பேசும் கட்சி என்ற வகையில் திமுக கட்சியை தடை செய்து சமூக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். பாரத தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் இதை தேச நலன் கருதி தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Share it if you like it