Share it if you like it
ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜாபர் சாதிக் கூட்டாளியான சதா என்கிற சதானந்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன், சலீம் ஆகியோருக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் சகோதரர்கள் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it