லவ்ஜிகாத் தொடர்பாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில், லவ்ஜிகாத் காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம் மணல்மேடு பகுதி குமாரசாமி 2-வது வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சந்தியா, தனியார் கல்லுாரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை லவ்ஜிகாத் என்னும் காதலை வலையில் வீழ்த்தி இருக்கிறார் சூரம்பட்டி பாரதிபுரத்தைச் சேர்ந்த அலாவுதீன் என்பவர். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தியாவின் வீட்டுக்கு அருகே நின்று இருவரும் பேசி கொண்டிருந்திருக்கிறார்கள். இதை கவனித்து விட்ட தாய் பூங்கொடி, சந்தியாவை கண்டித்திருக்கிறார்.
இதன் பிறகு, சிறிது நேரம் கழித்து சந்தியாவை வீட்டில் காணாதது கண்டு திடுக்கிட்டார். பீரோவில் பார்த்தபோது கல்விச் சான்றிதழ்களையும் காணவில்லை. ஆகவே, மகள் சந்தியா அலாவுதீனுடன் தலைமறைவாகி விட்டதை உறுதி செய்தார். இதையடுத்து, இது குறித்து சூரம்பட்டி போலீஸில் பூங்கொடி புகார் செய்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, நேற்று தனது குடும்பத்தினருடன் வந்து ஈரோடு எஸ்.பி. சசி மோகனிடம் புகார் அளித்திருக்கிறார் பூங்கொடி.
அப்புகாரில், எனது மகள் சந்தியாவை, காதல் என்கிற பெயரில் அலாவுதீன் என்பவர் கடத்தி சென்றுவிட்டார். அவர், திருட்டு, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, எனது மகளை அவர் வெளிநாட்டுக்கு விற்பனை செய்து விடுவார் அல்லது கொலை செய்து விடுவார் என்று எங்களுக்கு பயமாக இருக்கிறது. ஆகவே, எனது மகளை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். லவ்ஜிகாத் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியானது. இப்படத்தில் ஹிந்து பெண்கள் எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டு, மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். பின்னர், அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அடிமையாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு அப்பெண்கள் அனுபவிக்கும் சித்ரவதை எவ்வளவு என்பது குறித்து மிகத்தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் இதேபோன்ற லவ்ஜிகாத்தால் ஹிந்து பெண்கள் பலிகடாவாவது வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று ஹிந்து அமைப்புகள் வேதனை தெரிவிக்கின்றன.