மாணவர்களுக்கு இந்த நிலையா? வைரலாகும் வீடியோ!

மாணவர்களுக்கு இந்த நிலையா? வைரலாகும் வீடியோ!

Share it if you like it

பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அனைத்துத் துறைகளும் தறிகெட்டுப் போய் கிடக்கின்றன. குறிப்பாக, கல்விச்சாலைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மது, கஞ்சா போன்ற போதைகளுக்கு மாணவர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள். மது அருந்தி விட்டு வந்தும், கஞ்சா புகைத்து விட்டு வந்தும் மாணவர்கள் பள்ளியில் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது. ஒரு போதை மாணவன் ரெக்கார்டு நோட்டு கேட்ட ஆசிரியரை அடிக்கப் பாய்கிறான். இன்னொரு மாணவனோ தவறை தட்டிக் கேட்ட ஆசிரியையின் தலையில் கத்தியால் வெட்டுகிறான். மற்றொரு மாணவனோ ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்க, கடைசி பெஞ்சில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். இப்படி போற்றி வணங்கப்பட வேண்டிய ஆசிரியர்கள், மாணவர்களால் இன்று இழிவுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர்களும் சில சமயங்களில் தங்களது கடமையை மறந்து செயல்படுகிறார்கள். கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யச் சொல்வது, கழிப்பறைகளை சுத்தம் செய்யச் சொல்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்குகின்றனர். சமீபத்தில் ஒரு அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதேபோல, பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா முள்ளம்பட்டியில் அமைந்திருக்கிறது தொடக்கப்பள்ளி. இங்கு பள்ளிக்கு முதலில் வரும் மாணவர்களை வகுப்பறையை சுத்தம் செய்வது, கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுத்தி வந்திருக்கிறது பள்ளி நிர்வாகம். இது எப்படியோ ஊர் மக்களுக்குத் தெரியவரவே, மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த விவகாரம் விஸ்வரூம் எடுக்கவே, கலெக்டர் வரை விவகாரம் சென்றது. இதைத் தொடர்ந்து அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மைதிலி, ஆசிரியை சுதா ஆகியோர் சஸ்பெண்ட். செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் சீரழிவது கவலை அளிக்கும் விதமாக இருந்தாலும், ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்கள் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it