1,811 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு அதிரடி!

1,811 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு அதிரடி!

Share it if you like it

கடந்த 3 ஆண்டுகளில் 1,811 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கும் ஏழை, எளியவர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொண்டு நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டுகின்றன. எனினும், சில தொண்டு நிறுவனங்கள் அந்நிய நாட்டில் இருந்து பெறும் நன்கொடைக்கு உரிய விளக்கத்தை அளிப்பதில்லை. இதன்காரணமாக, நாட்டில் மதமாற்றங்கள் அதிகரிப்பு, தலைதூக்கும் தீவிரவாதம், கருப்பு பணம் மற்றும் பிரிவினை சக்திகளின் ஆதிக்கம் தலை தூக்குவது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது.

இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ”அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்தை’’ மத்திய அரசு கொண்டு வந்தது. அந்தவகையில், இந்த சட்டமானது கடந்த செப்டம்பர் 27, 2010 ஆம் ஆண்டு அன்று  இயற்றப்பட்டு, மே 1, 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டு என இரண்டு முறை திருத்தம் செய்யப்பட்டது. மீண்டும் ஒரு முறை திருத்தப்பட்டு, மக்களவையில் கடந்த செப்டம்பர் 21, 2020 அன்றும், மாநிலங்களவையில் செப்டம்பர் 23, 2020 அன்றும், ”அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டம்” ( FCRA ) நிறைவேற்றப்பட்டன.

இப்படிப்பட்ட சூழலில், FCRA சட்டத்தை மீறியதாகக் கூறி 1,811 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பிரிவினை சக்திகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம் இதோ.

/https://www.thehindu.com/news/national/fcra-licence-of-1811-ngos-cancelled-in-3-years-govt/article66259651.ece


Share it if you like it