பிரதமர் மோடியை புகழ்ந்த காங். மாஜி மத்திய அமைச்சர்! கட்சியிலிருந்தும் விலகல்: பா.ஜ.க.வில் இணைகிறார்..!

பிரதமர் மோடியை புகழ்ந்த காங். மாஜி மத்திய அமைச்சர்! கட்சியிலிருந்தும் விலகல்: பா.ஜ.க.வில் இணைகிறார்..!

Share it if you like it

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.பி.என்.சிங், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். இவர் விரைவில் பா.ஜ.க.வில் இணையவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உட்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் தவிர, இதர 4 மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் வெற்றிபெறும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருப்பதால், அக்கட்சிக்கு மவுஸு கூடியிருக்கிறது. இதனால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிதின் பிரசாதா, அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகளும், தலைவர் அகிலேஷ் யாதவின் தம்பி மனைவியுமான அபர்ணா யாதவ், பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.பி.என்.சிங், அக்கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். தற்போது, உத்தரப் பிரதேச மாநிலம் பத்ராவுனா தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் இவர், தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ‘கட்சிக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி. இது எனக்கு ஒரு புதிய தொடக்கமாகும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பாரத தேசத்தை கட்டி எழுப்புவதில் எனது பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், ஆர்.பி.என்.சிங் பா.ஜ.க.வில் இணைவது உறுதியாகி இருக்கிறது.


Share it if you like it