புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்: தி கிரேட் கிரிகாலன்… அய்யோ அங்க பார்த்துட்டு, அப்புடியே இங்க பார்ப்பானுங்களே…!

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்: தி கிரேட் கிரிகாலன்… அய்யோ அங்க பார்த்துட்டு, அப்புடியே இங்க பார்ப்பானுங்களே…!

Share it if you like it

புதுச்சேரி மக்களுக்கு லக்கி பிரைஸ் அடித்திருக்கிறது. ஆனால், தமிழக மக்களுக்குத்தான் எப்போது அடிக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. நேற்று அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, மாலையில் சிறுதானிய சிற்றுண்டி, முதியோருக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு போன்ற பல்வேறு கவர்ச்சியான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும், சுனாமி நினைவிடம், கடலுக்கடியில் பூங்கா, பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் கருவிகள் போன்ற திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

அதேபோல, பெண் குழந்தை பிறந்தவுடன், அப்பெண் குழந்தையின் பெயரில் 50,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனவும், 18 ஆண்டுகள் கழித்து அப்பெண் குழந்தையின் மேற்படிப்பு அல்லது திருமணத்திற்கு அந்த நிரந்தர வைப்புத் தொகை பயன்படும் என்று தெரிவித்தார். மேலும், புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டு வரும் உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும். தவிர, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும். இதனால் புதுவை அரசுக்கு 126 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்புதான் அம்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதேசமயம், தமிழக மக்களை கவலையிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருக்கிறது. காரணமா, தேர்தலில் வாக்குறுதி கொடுக்காத புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சமையஸ் கேஸ் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்த தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என்று அதிருப்தியுடன் தெரிவிக்கிறார்கள்.


Share it if you like it