ராஜ்பவனில் நடந்த அதிசயம்: ஷப்ரீன் இமானாவிற்காக ஆளுநர் செய்த தரமான சம்பவம்!

ராஜ்பவனில் நடந்த அதிசயம்: ஷப்ரீன் இமானாவிற்காக ஆளுநர் செய்த தரமான சம்பவம்!

Share it if you like it

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவியை கெளரவித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டினை பலர் பாராட்டி வருகின்றனர்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா தனது பெற்றோருடன் சென்னை வந்திருந்தார். இதையடுத்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்காக ராஜ்பவனில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் மாணவி ஷப்ரீன் இமானா தங்க வைக்கப்பட்டார்.

விதிமுறைப்படி தனி நபர்கள் இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை என ராஜ்பவன் அதிகாரிகள் கவர்னரிடம் கூறியிருக்கின்றனர். இருப்பினும், தமிழ் வழியில் கல்வி பயின்று சாதனை படைத்த மாணவிக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் எந்தவிதமான தவறில்லை என கவர்னர் கூறியுள்ளார். இதன்பின்னர், மாணவி ஷப்ரீன் இமானாவிற்காக ராஜ்பவன் விருந்தினர் மாளிகை கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it