தென்னிந்திய ஆய்வு மையத்துக்கு கவர்னர் பாராட்டு!

தென்னிந்திய ஆய்வு மையத்துக்கு கவர்னர் பாராட்டு!

Share it if you like it

“தி இன்டாமிடபுள்ஸ்” (THE INDOMITABLES) புத்தகத்தின் ஆசிரியர் சுதாகர் நாராயணன் மற்றும் தென்னிந்திய ஆய்வு மையத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த 125 சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் சுதாகர் நாராயணன் தொகுத்திருந்தார். இதை “தி இன்டாமிடபுள்ஸ்” (THE INDOMITABLES) என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டது தென்னிந்திய ஆய்வு மையம். இப்புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையிலுள்ள நாரதகான சபாவில் கடந்த மாதம் 11-ம் தேதி நடந்தது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேசன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிலையில், இப்புத்தகத்தின் ஆசிரியர் சுதாகர் நாராயணன் மற்றும் தென்னிந்திய ஆய்வு மையத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர், மேதகு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து, “The Indomitables” புத்தகத்தை நேற்று வழங்கினார்கள். புத்தகத்தை பெற்றுக் கொண்ட கவர்னர், தமிழகத்தைச் சேர்ந்த 125 சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி தொகுத்ததற்காக நூலாசிரியர் சுதாகர் நாராயணன் மற்றும் தென்னிந்திய ஆய்வு மையத்துக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இப்புத்தகத்தை வாங்க விரும்பினால், //https://vijayabharathambooks.com/books/the-indomitables/ என்கிற இணையதள முகவரியிலும், பிற மாநிலத்தவர் //https://www.amazon.in/dp/8196021720, //https://www.hindueshop.com/product/the-indomitables-of-tn/ என்கிற இணையதள முகவரியிலும் பதிவுசெய்து ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.


Share it if you like it