குஜராத் மண்ணிலேயே குஜராத்தை மண்ணை கவ்வ வைத்து விட்டதாக தமிழகத்திலுள்ள உ.பி.ஸ்கள் குதூகலித்து வரும் நிலையில், குஜராத்தியால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி கிடைத்தது என்று சவுக்கடியாக பதில் கொடுத்திருக்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில், சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றியை சென்னை அணியின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தி.மு.க. உ.பிஸ்கள் இதையும் அரசியலாக்கி வருகிறார்கள். அதாவது, குஜராத் மண்ணிலேயே குஜராத்தை மண்ணை கவ்வ வைத்து விட்டோம் என்றும், மோடி என்றாலே எங்கேயாக இருந்தாலும் அடிப்போம் என்றும் பதிவிட்டு ஆர்கசம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை அணியின் வெற்றிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த பதிவை ரீட்விட் செய்திருந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “கோடிக்கணக்கான ரசிகர்கள் சி.எஸ்.கே. வெற்றியை கொண்டாடுவது போன்றே முதல்வரும் கொண்டாடி வருகிறார். உண்மையான தலைவன் ஒருவன் இருந்தால், எப்பேற்பட்ட எதிராளியையும் வீழ்த்த முடியும். எவ்வளவு வலிமையாக இருப்பதாக குஜராத் காட்டிக் கொண்டாலும், அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். பல குஜராத்திகளை நாம் கடந்த காலத்தில் தோற்கடித்துள்ளோம், இனியும் தோற்கடிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில் பேட்டியளித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர், “சென்னை அணியில் வெற்றிக்குத் தேவையான ரன்களை அடித்து ஜெயிக்க வைத்த ஜடேஜா ஒரு பா.ஜ.க. காரியகர்த்தா. இவரது மனைவி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தவிர, ஜடேஜா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதோடு, சென்னை அணியில் ஒரு தமிழர் கூட ஆடவில்லை. ஆனாலும், நாம் சி.எஸ்.கே. வெற்றியை கொண்டாடுகிறோம். அதற்குக் காரணம் தோனிதான். எல்லாவற்றுக்கும் மேலாக, கடைசி வின்னிங் ரன் அடித்து சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற வைத்தது ஒரு பா.ஜ.க. காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆகவே, இதே முடிவுதான் 2024 தேர்தலிலும் நடக்கும்” என்று நெத்தியடியாக பதலளித்திருக்கிறார்.