இந்தியாவிலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் ஒரே மாநிலமான கேரளாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் மற்றும் தீவிரவாதத்திற்கு ஆதரவான மனநிலை கொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வருகிறது என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஹலால் அல்லாத உணவகத்தை திறந்த ஹிந்து பெண் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கேரளாவில் முதல் முறையாக ஹலால் அல்லாத உணவகத்தைத் திறந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற துஷாரா என்னும் பெண்மணி தனது இரண்டாவது கிளையைத் திறப்பதற்கு முயன்ற பொழுது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடுமையான மிரட்டலுக்கு அவர் உள்ளாக்கப்பட்டுள்ளார். உணவகத்தின் முன்பு இருந்த ஹலால் அல்லாத பெயர் பலகையை எடுக்குமாறு அவரை எச்சரித்துள்ளனர்.

நந்தஸ் கிச்சன் என்னும் பெயரில் கடந்த ஜனவரி மாதம் 15, 2021 அன்று கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஹலால் அல்லாத உணவகத்தை துவக்கி இருந்தார். துஷாராவின் செயல் அடிப்படைவாதிகளுக்கு கடும் கோவத்தை ஏற்படுத்திய காரணத்தினால். அக்டோபர் 25 திங்களன்று அவர் மீது மிக கொடூரமான தாக்குதலை அடிப்படைவாதிகள் நடத்தியுள்ளனர். தனக்கு நடந்த அநியாயம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டே அவர் பேஸ்புக் நேரலையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார்.

ஹலால் உணவு இங்கே தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் பல முஸ்லிம்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், தனது உணவகத்தின் இரண்டாவது கிளையை துஷாரா திறக்கும் பணியில் இருந்த சமயத்தில் தான் இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி; opindia