நீட் தேர்வுக்கு எதிராக பிரசுரம் செய்த பத்திரிகையை மாணவர்களிடம் கொடுத்த இந்து பத்திரிகையை பெற்றோர்கள் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை கருத்தில் கொண்டும், பணம் படைத்தவர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாகவும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் நீட் தேர்வை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்கள் கூட நீட் தேர்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், கல்வியில் மிகச் சிறந்த மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு மட்டும் நீட் தேர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மருத்துவக் கல்லூரி உரிமையாளர்களிடம் எப்படியெல்லாம் வசூல் வேட்டை நடத்த முடியும் என்று தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீரசாமி பேசிய காணொளியை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.
இப்படிப்பட்ட சூழலில், மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள் நேற்றைய தினம் நீட் தேர்வை எழுதி இருக்கின்றனர். இதையடுத்து, தேர்வு முடிந்து மாணவர்கள் வெளியே வந்து இருக்கின்றனர். அப்போது, ஹிந்து பத்திரிகையின் ஊழியர்கள் நீட் குறித்து அவதூறு பிரசுரம் செய்த பத்திரிகையை மாணவர்களிடம் வழங்கி இருக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த பத்திரிகையை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.