பிரசாரம் ஓய்ந்த பிறகு ஓட்டு சேகரித்தால் சிறை – எச்சரித்த தேர்தல் ஆணையம் !

பிரசாரம் ஓய்ந்த பிறகு ஓட்டு சேகரித்தால் சிறை – எச்சரித்த தேர்தல் ஆணையம் !

Share it if you like it

முதல்கட்ட லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பிரசாரம் நாளை (ஏப்.,17) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு சமூக வலைதளங்களில் பிரசாரம் பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்களிடம் ஓட்டு சேகரிக்கும் வகையில், அவர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மூலம், தேர்தல் பிரசாரம் செய்வது அதிகரித்துள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட தகவல்கள் அதிகப்படியான நபர்களுக்கு சென்று சேர்வதுடன், செலவுகளும் குறைவு; இந்த வகை பிரசாரத்திற்கு கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே அந்தந்த கட்சிகள் தங்களின் தொழில்நுட்ப அணியின் உதவியுடன் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்கிடையே நாளை (ஏப்.,17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. அதன்பிறகு கட்சிகள் பிரசாரம் செய்யக்கூடாது என்பது விதி. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாளை மாலை 6 மணி வரை மட்டுமே ஓட்டு சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு மேல் பிரசாரத்தை பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it