இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் அரியவகை விலங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதியாக லடாக் விளங்குகிறது. இப்பகுதி இந்தியாவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனினும், அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் அவ்வப்போது எல்லையில் வாலாட்டி வருகின்றன. இந்த சூழலில், லடாக் பகுதியில் அரிவகை விலங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த விலங்கு, பூனை மற்றும் புலியைப் போன்ற முகத் தோற்றத்தையும், உடல் முழுவதும் பூனை மற்றும் நாய்களைப் போல உடல் முழுவதும் பொசுபொசுவென முடிகளையும் கொண்டிருக்கிறது.
அதேசமயம், காதுகளின் அருகே மான்களைப் போல வளைந்த கொம்புகள் இருக்கின்றனர். லடாக் எல்லைப் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த அரியவகை விலங்கைக் கண்டு அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தன. இந்த அரியவகை விலங்கை வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருவதால், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…