கடந்த கால இந்தியா – நிகழ் கால பாரதம் – சர்வதேச அரங்கில் கம்பீரமாக வலம் வரும் பாரதத்தின் இறையாண்மை

கடந்த கால இந்தியா – நிகழ் கால பாரதம் – சர்வதேச அரங்கில் கம்பீரமாக வலம் வரும் பாரதத்தின் இறையாண்மை

Share it if you like it

சுதந்திர பாரதத்தில் சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தான் தேசத்தின் ஆளும் கட்சியாக இருந்தது. அதில் பெரும்பாலும் நேரு அவரின் மகள் இந்திரா காந்தி அவரது மகன் ராஜீவ் காந்தி என்று மூன்று தலைமுறைகளாக பிரதமர் பதவியில் இருந்திருக்கிறது. இடையில் சில காலம் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்திருக்கிறார். சுய விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு அவர் தேசத்தின் பக்கம் நின்று பல நல்ல முடிவுகளை எடுத்தாலும் அதற்கு போதிய வரவேற்பு ஒத்துழைப்பு கட்சியில் இருந்ததில்லை. துரதிருஷ்டவசமாக அவர் மர்மமாக மரணித்த பிறகு மீண்டும் நேரு குடும்பத்தின் ஆட்சி தொடங்கியது.

இதில் சில காலங்கள் இந்திராவின் காலத்தில் அவசரநிலை பிரகடனம் என்ற பெயரில் சட்டத்தின் வழியில் சர்வாதிகார ஆட்சியும் நடந்திருக்கிறது . அந்த அவசரநிலை பிரகடனம் இந்திரா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசுக்கு எதிரான அதிருப்தி உள்ளிட்டவற்றிலிருந்து தனது கட்சியையும் கட்சி தலைமை ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பொறுப்புக்கள் அதிகாரங்களை காப்பாற்றிக் கொள்ளவே அவசரநிலை பிரகடனம் செய்ததாக இன்று வரை அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.

ஜனதா கட்சி – ஜனதா தள கூட்டணி என்று பல பெயரிலும் இடையிடையே சில காலங்கள் காங்கிரஸ் அல்லாத ஆட்சியும் காங்கிரஸ் தலைமையில் இல்லாத பிரதமர் பொறுப்பும் கூட இருந்ததுண்டு. ஆனால் அதன் முழு பின்னணியும் கட்டுப்பாடும் காங்கிரஸ் கட்சியிடம் தான் இருந்தது . காரணம் காங்கிரஸ் கட்சியின் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் தான் அந்த பொம்மை ஆட்சிகள் சில காலம் தொடர முடிந்தது. காங்கிரஸின் விருப்பத்திற்கு மாறாக நடந்தாலோ அல்லது இனி இந்த ஆட்சி தொடர்வதால் தங்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி உணரும் போது அந்த ஆட்சிகள் உடனடியாக கவிழ்க்கப்பட்ட வரலாறு உண்டு.

காங்கிரஸின் தலைமையிலேயே ஒரு ஆட்சி. அதுவும் பெரும்பான்மை பலமுள்ள ஆட்சி. ஆனால் நேரு குடும்பத்தின் வம்சாவழியில் யாரும் தலைமை பதவியிலோ அதிகார பிடியிலோ இல்லாமல் ஒரு ஆட்சி காலம் அபூர்வமாக வந்தது. அது 91 முதல் 96 வரையிலான பி வி நரசிம்மராவ் பிரதமர் பதவியில் அவரது தலைமையிலான காங்கிரசின் ஆட்சிக்காலம் . இவரது ஆட்சிக் காலத்தில் நேரு குடும்பமும் அதன் வம்சமும் ஆட்சி அதிகாரத்திலோ கட்சியின் மேல்மட்ட விஷயங்களில் ஒரு தலையிடா வண்ணம் நரசிம்மராவும் அவரின் சகாக்களும் பெரும் கடுமை காட்டி வந்தார்கள். அதோடு ராஜீவ் காந்தி மரணித்த சமீபம் அதன் தாக்கமான பாதிப்புகள் என்று அவரது குடும்பமும் பெரிய அளவில் அரசியல் ஈடுபாடும் காண்பிக்கவில்லை. மாறாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெருமளவு நன்கொடைகளை வாரி குவித்து அதன் மூலம் அவர்களது குடும்பத்தினர் பெயரில் அறக்கட்டளைகள் சேவை அமைப்புகள் என்று பல்வேறு பணம் கொழிக்கும் அமைப்புகளை தொடங்கி ஒரு பெரும் சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் இட்டுக் கொண்டார்கள்.

இந்த அடித்தளங்கள் எல்லாம் பெருமளவில் பலன் கொடுக்க தொடங்கியதன் பலன் தான் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது வாஜ்பாய்க்கு எதிராக பாஜக கட்சிக்கு எதிராக திட்டமிட்ட விஷமப் பிரச்சாரங்கள் அவதூறு பிரச்சாரங்கள் செய்து உள்நாட்டு துணையோடும் அந்நிய அமைப்புக்களின் துணையோடும் 2004 ல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக உள்ளிட்ட பல்வேறு உதிரி கட்சி கூட்டணிகளோடு ஒரு ஆட்சியை அமைக்க முடிந்தது. இதில் முதலில் அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா தான் பிரதமர் பதவிக்கு வருவதாக திட்டம் இருந்தது. ஆனால் அவரின் இரட்டை குடியுரிமை மற்றும் அதன் மூலமாக சட்ட சிக்கல்கள் விதிகளை எல்லாம் காரணம் காட்டி அவர் பிரதமர் பதவி கனவு தகர்க்கப்பட்டது.

அவரின் குடும்பத்திற்கு நம்பிக்கையான விசுவாசியாக அறியப்பட்ட இந்திராவின் காலம் முதல் பல பொறுப்புக்கள் பதவிகள் வகித்து வந்தவர். சர்வதேச அளவில் பொருளாதார அறிவும் நல்ல அரசியல் தொடர்புகளை உடையவர் என்ற வகையில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் முன் நிறுத்தப்பட்டார். 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸின் கூட்டணி ஆட்சி காலத்தில் தொடர்ந்து இரண்டு முறை பிரதமர் பொறுப்பு வகித்தவர். ஆனால் அந்தப் பத்து ஆண்டு காலமும் அவர் பெயரளவில் தான் அதிகார மையமாக இருந்தார். அவரை வெறும் முகமூடியாக பயன்படுத்திக் கொண்டு பின் இருந்து முழு ஆட்சி அதிகாரம் செலுத்தியது காங்கிரஸின் தலைமை குடும்பமும் நேருவின் வம்சமும் தான் என்பது உலகம் அறிந்த ரகசியம்.

1998 முதல் 2004 வரை 6 ஆண்டுகள் காங்கிரசும் அல்லாது காங்கிரசின் தயவும் இல்லாத தேசத்தில் ஆட்சியும் அமைக்க முடியும் . அதை திறம்பட நடத்தியும் போக முடியும் என்று வாஜ்பாய் தலைமையிலான கூட்டணியின் ஆட்சி காலம் உணர்த்தியது. அவ்வகையில் வாஜ்பாய் என்னும் பாரதியன் தலைமையிலான ஆட்சி அதிகாரம் பெரும்பான்மை இல்லாத கூட்டணி ஆட்சி என்றாலும் எந்த நிலையிலும் தேசத்தின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் சமரசம் இல்லை என்ற வகையில் ஒரு நல்லாட்சியாக தொடர்ந்தது. சுதந்திர வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமர் காங்கிரசின் தயவு இல்லாத ஒரு ஆட்சி என்ற பெருமிதத்தோடு தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பாரதத்தின் தேசிய கொடியை ஏற்றி வைத்து காங்கிரஸின் அதிகார வெறிக்கும் அரசியல் இருமாப்பிற்கும் முடிவு கட்டினார் வாஜ்பாய் என்னும் மாமனிதர்.

இந்த அரசியல் தோல்வியையும் பின்னடைவையும் ஜீரணிக்க முடியாத காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் பெரும் பிரயத்தனம் செய்து 2004 ல் வாஜ்பாய் அரசுக்கு முடிவு கட்டி மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அதிகாரத்தில் அமர்த்தியது . அந்த பத்து ஆண்டு காலம் உள்நாட்டில் பெரும் பொருளாதார சீரழிவு வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் கடன் பெறுகியது. ஒரு புறம் பாகிஸ்தானின் அத்துமீறல் மறுபுறம் சீனாவின் ஊடுருவல் ஆக்கிரமிப்பு இலங்கை மாலத்தீவு நேபாளம் பூடான் உள்ளிட்ட சிறு நாடுகள் கூட பாரதத்தை ஏளனமாக அவமதித்து அலட்சியப்படுத்திய நிகழ்வுகள் வங்கதேசம் பர்மா வழியில் எல்லைப்புறத்தில் பெரும் ஊடுருவல் நாச வேலைகள் அளவுக்கு அதிகமாக கள்ளக்குடியேற்றம் அதன் காரணமான உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் பொருளாதார சீர்கேடு என்று தேசம் சீரழிவின் விளிம்பில் நின்றது.

திரும்பிய பக்கமெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காஷ்மீரில் தினமும் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு எல்லையில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் வெள்ளிக்கிழமை தோறும் தொடர் குண்டு வெடிப்புகள் அனைத்திற்கும் உச்சமாக மும்பையில் திரும்பிய பக்கம் எல்லாம் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச் சூடு வெடிகுண்டு தாக்குதல் நடத்தி மூன்று நாட்கள் தீவிரவாதத்தின் கோர பிடி என்று எந்நேரமும் மக்கள் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்தார்கள். பயங்கரவாதத்தின் தாக்குதலில் தப்பி பிழைத்தால் போதும். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தான் ஒவ்வொரு நாளும் இந்தியர்கள் வாழ்க்கை நகர்ந்தது.

2012 ல் குஜராத் மாதிரி என்ற வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு வாஜ்பாயின் வழியில் வந்த மோடி என்ற மாமனிதரை முன்னிறுத்தி பாஜக 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாரானது. மூன்று முறை முதல்வராக பூகம்பத்தில் உருக்குலைந்திருந்த குஜராத் மாநிலத்தை மீண்டும் அசுரத்தனமான வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்திருந்த மோடியின் செயல்பாடுகள். அதன் மூலம் குஜராத்தின் வளர்ச்சி குறிப்பாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பொது அமைதி இவை எல்லாம் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஆதரவை உருவாக்கியது. 2014 ல் அசுர பலத்தோடு மோடியை பிரதமர் பதவியில் அமர வைத்தது.

அவரின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பணமதிப்பிழப்பு சர்ஜிகல் ஸ்டிரைக் மேக் இன் இந்தியா என்று பாரதத்தின் நலன் வளர்ச்சி பாதுகாப்பை முன்னிறுத்தும் பல்வேறு திட்டங்கள். ஸ்வச் பாரத் டிஜிட்டல் இந்தியா என்று பாரதத்தின் கடைக்கோடி சாமானியனும் நலம் பெறும் சீர்திருத்தங்கள் என்று அவர் ஒட்டுமொத்த பாரதிய மக்களின் முகமாக மாறினார். அதன் விளைவு 2019 லும் பெருத்த வரவேற்புடன் மீண்டும் பாஜக தலைமையிலான கட்சி பெருவெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமரானார்.

முதல் ஐந்து ஆண்டுகளில் வலுவான அடித்தளமிட்ட நாட்டின் நலன் பாதுகாப்பு வளர்ச்சி என்பதெல்லாம் இரண்டாவது ஐந்தாண்டுகளில் ராஜபாட்டையாக விரிவடைய தொடங்கியது . அதன் பலன் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் சர்வதேச அளவில் பாகிஸ்தானின் தனிமை சீனாவின் ஊடுறுவல் ஆக்கிரமிப்பு பொருளாதார சுரண்டல் சாதிகாரம் அனைத்திற்கும் முடிவு கட்டுதல் பாரதத்திலிருந்து களவு போன பொக்கிஷங்கள் எல்லாம் பெரும் அளவில் மீட்டு வருவது எந்த ஒரு தேசத்தின் போர் பூகம்பம் உள்நாட்டு நெருக்கடி என்றாலும் முதலில் உதவி கரம் நீட்டும் நிலையில் பாரதம் அதே நேரத்தில் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான அனைத்து முனைப்புகளிலும் பாரதம் வெற்றிகரமான செயல்பாடுகள் என்று உலகமே உற்று நோக்கும் ஒரு முன் மாதிரி ஆட்சியை சமகாலத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பத்தாண்டு கால மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் பயணித்த ஆட்சியாளர்கள் அங்கே அவர்களின் குடும்ப சுற்றுலா தங்களின் முதலீடு தங்களின் நலன் சார்ந்த எதிர்பார்ப்புகள் முன்வைத்தே பயணித்தார்கள். அதன் பலன் உலகம் நாடுகள் மத்தியில் பாரதம் ஏளனமாக பார்க்கப்பட்டு ஊழலில் ஊற்றுக்கண்ணாக பயங்கரவாதத்தின் ஆடுகளமாக பலியாடாக பார்க்கப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக மோடியின் ஆட்சிக் காலத்தில் இதே வெளிநாட்டு பயணங்கள் எல்லாம் பாரதத்தின் ராஜ்ய ரீதியான சர்வதேச நாடுகளின் நல்லெண்ண நட்புறவு வேண்டும் அரசு முறை பயணமாக மட்டுமே இருந்தது. பல ஆண்டுகள் சுய வெறுப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட தேசத்தின் நலனுக்காக மோடி உலகம் சுற்றினார். இன்று உலகமே பாரதத்தை மையமாக வைத்து சுழல்கிறது. கடந்த காலங்களில் போகும் நாடுகளில் எல்லாம் கடன் உதவி முதலீடு உதவி என்று கையேந்தி நிற்கும் நிலையில் இருந்த பாரதம் இன்று கொரோனா காலத்தில் வல்லரசு நாடுகள் முதல் நலிந்த நாடுகள் வரை அனைத்திற்கும் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் முதல் உணவுப் பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் என்று வாரி வழங்கி தாயுள்ளத்தோடு உலகையே பாதுகாத்தது.

ஆனால் இது எதையுமே ஆக்கபூர்வமாக அணுகாமல் ஒரு பொறுப்பான எதிர்கட்சிக்கு உரிய மாண்போடு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதும் ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டி மக்கள் நலனை பாதுகாப்பதும் தான் எதிர்க்கட்சியின் முதல் கடமை என்பதை மறந்து நாங்கள் எதிர்க்கட்சிகள் அல்ல . தேசத்தின் எதிரி கட்சிகள் ‌எங்களுக்கு ஆட்சி அதிகாரமும் அதன் மூலமாக அதிகார கொள்ளையுமே பிரதானம் . நாடும் மக்களும் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்ற தொனியில் தான் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அரசியலும் அதன் கூட்டணி கட்சிகளின் கருத்துக்கள் செயல்பாடுகளும் தொடர்கிறது. தேசத்தின் துயருறும் நேரங்களில் எள்ளி நகையாடுவது. ஏதேனும் ஒரு துறையில் தேசம் வெற்றியை சாதிக்கும் போது அதை கொச்சைப்படுத்தி பேசுவது என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சி பாரதத்தின் ஆட்சியாளர்கள் மீதும் தங்களுக்கு வாக்களிக்காத பாரத மக்களின் மீதான வன்மத்தை கொட்டி தீர்க்கிறது.

கடந்த காலங்களில் சர்வதேச சமூகத்தின் பார்வையில் ஏளனத்தையும் அவமதிப்பையும் மட்டுமே கண்டு வந்த அந்த 10 ஆண்டுகால பிரதமர் பதவியில் பல்வேறு சர்வதேச பயணங்கள் சர்வதேச கூடுகைகளில் பாரதத்தின் பிரதிநிதியாக பங்கேற்ற மண்மோகன் சிங்கின் அனுபவமும் நடவடிக்கையும் கண்கண்ட சாட்சியங்கள் . ஆனால் இன்று அவரது கண் முன்னே மோடி சர்வதேச நாடுகளை பாரதத்தின் நியாயத்தை உணர்ந்து அதன் பக்கம் நிற்க வைத்து இருக்கிறார். உலக அரங்கில் பாரதத்தை தவிர்க்க முடியாத ஆளுமையாக வளர்த்தெடுத்திருக்கிறார். தனது ராஜ்ஜிய செயல்பாடுகளால் யுத்தமின்றி சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட பகை நாடுகளை பல் பிடுங்கிய பாம்பாக அடக்கி வைத்திருக்கிறார். மறுபுறம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரதத்தை சீண்டிப் பார்க்கும் நாடுகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.

கனடா நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலை வழக்கில் முக்கிய பின்னணியாக இருந்ததாக ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது. இந்திரா காந்தி வாழ்ந்த காலத்திலேயே இந்திய ஏர்பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானத்தை கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் தகர்த்தார்கள். கனடா நாட்டு விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்விற்கு இன்று வரை கனடா நாடு எந்த ஒரு விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.

இந்திராவின் கொலை பல்வேறு இடங்களில் ராஜீவ் காந்தியை கொல்லும் முயற்சிகள் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் எத்தனையோ பயங்கரவாத சம்பவங்கள் குண்டு வெடிப்புகள் என்று பெரும் நாச வேலைகளை இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் முன்னெடுத்தார்கள். இவை அத்தனையையும் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியாளர்களால் கனடா நாட்டில் பலமுறை அவர்களின் கவனத்திற்கு பெயரளவில் கொண்டு செல்லப்படுவதும் அதை கனடா அரசு கண்டு கொள்ளாமல் போவதும் வாடிக்கையாக இருந்தது .பெரும் நெருக்கடி சூழும் காலகட்டத்தில் மட்டும் கடந்த கால இந்திய ஆட்சியாளர்கள் கனடாவிடம் கெஞ்சி கேட்டு அவமதிக்கப்பட்டு திரும்பி வருவார்கள்.

இன்றைய ஆட்சியாளர்கள் பாரதத்தின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவர்களுக்கு முடிவுரை எழுதுகிறது ஆனால் அன்று தேசத்தின் சீரழிவுகளை இயலாமையில் இருந்து வேடிக்கை பார்த்த நேருவின் வம்சமும் இன்றைய காங்கிரஸின் தலைமை குடும்பமும் பயணிக்கும் வெளிநாடுகளில் எல்லாம் பாரதத்தின் ஆட்சியாளர்களையும் செயல்பாடுகளையும் அவதூறு பேசி தேசத்தை அவமதிக்கிறது மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு வெளிநாடுகளிடம் வெளிப்படையாக ஆதரவு தாருங்கள் என்று நிற்கிறது.கையேந்தி நின்று தானும் அவமானப்பட்டு தேசத்தையும் அவமதிக்க துணிகிறது. ஆனால் இவர்கள் சொல்கிறார்கள் மோடியும் பாஜகவும் தேசத்தை விற்று விட்டார்கள் நாங்கள் வந்தால் தான் காப்பாற்ற முடியும் என்று வாய்க்கூசாமல் மேடை தோறும் பேசுகிறார்கள்.

பாரதத்தின் வளர்ச்சியையும் அதன் தொடர் வெற்றிகளையும் ஜீரணிக்க முடியாமல் கடந்த காலங்களை போல் பாரதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கெடுமதியோடு செயல்படும் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் பாணியிலேயே தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். அதை பார்த்த பத்து ஆண்டுகள் காங்கிரஸின் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் அவர்களை சமீப காலமாக பிரதமர் மோடி பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர். அவரின் தலைமையில் அவரால் கடினமான முடிவுகளை எடுக்க முடிகிறது .அதை துணிச்சலாக செயல்படுத்தவும் முடிகிறது .அதனால் தேசம் நலமும் பலமும் பெறுகிறது. என்னால் கூட கடினமான முடிவுகளை எடுக்க முடிந்திருக்கும். ஆனால் அந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரமோ அதை செயல்படுத்தும் அதிகாரமும் எனக்கு இருந்ததில்லை என்று தான் பத்தாண்டு காலம் ஒரு பொம்மை பிரதமராக மட்டுமே இருந்தேன் என்ற உண்மையை அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

அவரது ஆட்சிக் காலத்தில் இந்திய எல்லையிலே இந்திய மீனவர்களை இத்தாலிய கடற்படை சார்ந்தவர்கள் சுட்டுக்கொன்ற விவகாரம் சர்வதேச அளவில் எதிரொலித்தது. இலங்கை கடற்படையால் தினமும் தென் தமிழகம் சார்ந்த மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாக இருந்தது . அரபு நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வாழ்வாதாரம் தேடி போகும் இந்தியர்கள் அங்கு குறைந்தபட்ச பாதுகாப்பு ராஜ்ய அரவணைப்பும் இல்லாமல் சொல்லொணா துயர்களை அனுபவித்தார்கள். ஆனால் இன்று இலங்கை மொத்தமாக பாரதத்திடம் சரணாகதி அடைந்திருக்கிறது. சீனா பாகிஸ்தான் மேல் எழும்ப முடியாத நிலையில் பெட்டி பாம்பாக அடங்கி நிற்கிறது . வங்கதேசம் பர்மா உள்ளிட்ட நாடுகள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடவடிக்கையால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தால் கள்ஹக்குடியேறிகளுக்கும் விரைவில் முடிவு கட்டப்படும் என்ற நிலை.

சர்வதேச நாடுகளில் கல்வி வேலை வாய்ப்பு தொழில் வியாபாரம் காரணமாக போகும் இந்தியர்களுக்கும் அங்கேயே பல காலமாக வாழ்ந்து வரும் வம்சாவளி இந்தியர்களுக்கும் உரிய கௌரவம் பாதுகாப்பு மரியாதை ராஜ்ஜிய அரவணைப்பு அனைத்தும் சமகாலத்தில் உறுதி செய்யப்படுகிறது. எதிர்பாராத விதமாக சில அசம்பாவிதங்கள் இழப்புக்கள் நேரிட்டாலும் அதற்கு உரிய நடவடிக்கையும் பதிலடியும் தரப்படுகிறது. ஆனால் இது எதையும் உணராத காங்கிரசின் தலைமை குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் இன்னமும் மோடியை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தேசத்தை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி என்ற பெயரில் தேசத்திற்கு எதிரி கட்சியாக மக்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் எதிரிகள் எதிரிகளாக தங்களை தேச விரோத அரசியலை முன்னெடுக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு பேச்சும் ஒவ்வொரு செயலும் எதிர்வரும் தேர்தலில் வெற்றி ஆட்சி அதிகாரம் என்ற ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கிறதே தவிர பாரதத்தின் பன்முகத்தன்மை நலன் வளன் பாதுகாப்பு வளர்ச்சி திட்டங்கள் சர்வதேச அரங்கில் தேசத்தின் கௌரவம் உள்நாட்டில் தேசிய பாதுகாப்பு இறையாண்மை உள்ளிட்ட எந்த ஒரு ஆக்கபூர்வமான விஷயங்களிலும் அவர்களின் கவனம் இல்லை. அந்த வகையில் காங்கிரஸ் தான் எந்த காலத்திலும் தன் தவறுகளை உணரவோ திருந்தவோ போவதில்லை. எங்களுக்கு தேவை ஆட்சி அதிகாரமும் அதிகார கொள்ளையும் மட்டும் தான் என்பதில் தெளிவாக இருக்கிறது. நாடும் மக்களும் எப்படி போனாலும் அதை பற்றி கவலை இல்லை . ஒன்று இந்த தேசத்தை நாங்கள் ஆள வேண்டும். இல்லையேல் இந்த தேசத்தை ஆள்பவர்களை நாங்கள் ஆள வேண்டும். இரண்டும் இல்லையேல் நாங்கள் ஆட்சியாளர்களையும் நிம்மதியாக ஆள விடமாட்டோம். வாக்களிக்காத மக்களையும் நிம்மதியாக வாழ விட மாட்டோம் என்ற தனது பாணியில் மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கிறது.


Share it if you like it