காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் டிஜிட்டல் இந்தியா குறித்து பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் அவர்கள் டிஜிட்டல் இந்தியா குறித்தும் அது சாத்தியமற்றது என நாடாளுமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியுள்ளார். கிராமத்தில் உள்ள பெண்மணி ஒருவர் கடைக்கு சென்று உருளை கிழங்கு, தக்காளி, வாங்குகிறார். அதற்குறிய தொகையை எப்படி? அவர் செலுத்துவார். அங்கு இன்டர்நெட் கிடையாது, வைஃபை கிடையாது, இது எப்படி சாத்தியமாகும் என்று ப.சிதம்பரம் அவர்கள் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார்.
முடியாது என்று கூறிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருக்கு தனது நடவடிக்கையின் மூலம் பாரதப் பிரதமர் மோடி சாதித்து காட்டியுள்ளார். இந்தியாவில் இன்று பல்வேறு மூலை முடுக்குகளிலும் டிஜிட்டல் இந்தியா வந்து விட்டது என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் காணொளியே சிறந்த சான்று.