இனி டாலருக்கும், ரூபாய்க்கும்தான் போட்டியே..!

இனி டாலருக்கும், ரூபாய்க்கும்தான் போட்டியே..!

Share it if you like it

இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கோள்வதற்கும், அதன் செயல்முறையை பயன்படுத்துவதற்கும் 18 நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. எனவே, அமெரிக்க டாலருக்கு சவால் விடக் காத்திருக்கிறது இந்திய ரூபாய் என்பதுதான் சுவாரஸ்யம்.

உலக வர்த்தகத்தில் டாலர் மீதான மோகத்தை குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, கடந்தாண்டு ஜூலை மாதம் இந்திய ரூபாயில் எல்லை தாண்டிய வர்த்தக பரிவர்த்தனைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அப்போது, எஸ்.ஆர்.வி.ஏ.க்களின் செயல்முறை தொடங்கியது. இந்த சூழலில், இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் கூறுகையில், “பதிவுகளின்படி சர்வதேச நாணயமாக மாறுவதன் முதற்படியாக இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்.பி.ஐ. – ரஷ்யா மற்றும் இலங்கை உட்பட 18 நாடுகளில் உள்ள 60 வங்கிகளில் இந்திய ரூபாயில் பணம் செலுத்துவதற்கு சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ஒப்புதல் அளித்திருக்கிறது.

டாலர் மயமாக்கங்களில் இருந்து விலக நினைக்கும் 18 நாடுகளில் முக்கியமாக ரஷ்யா உள்ளூர் நாணய வர்த்தகத்தை மேம்படுத்த அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய ரூபாய் பரிவர்த்தனை மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவிற்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்” என்று தெரிவித்தார். அதாவது, ஜெர்மனி, மலேசியா, உகாண்டா, இஸ்ரேல், மியான்மர், ஓமன், கென்யா, நியூசிலாந்து, தான்சானியா, ஐக்கிய நாடுகள், கயானா, போட்ஸ்வானா, சீஷெல்ஸ், மொரிஷியஸ், பிஜி உள்ளிட்ட 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய சம்மதம் தெரிவித்திருக்கின்றன. இதன் மூலம் இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஆகவே, அமெரிக்க டாலருக்கு சவால் விடப் போகிறது இந்திய ரூபாய் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Share it if you like it