பிரதமர் குறித்து அவதூறு இ-மெயில்: சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் தஞ்சை ஜேம்ஸ் ராஜா!

பிரதமர் குறித்து அவதூறு இ-மெயில்: சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் தஞ்சை ஜேம்ஸ் ராஜா!

Share it if you like it

பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்து, அவதூறாக இ-மெயில் அனுப்பிய தஞ்சாவூரைச் சேர்ந்த பிஎச்டி. மாணவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. எம்.காம். பட்டதாரியான இவர், சூழலியல் சுற்றுலா தொடர்பாக முனைவர் பட்டத்துக்கான (பிஎச்.டி.) ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு இ-மெயில் அனுப்பி இருந்தார். அந்த இ-மெயிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்தை விக்டர் ஜேம்ஸ் ராஜா அனுப்பி இருக்கிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில், சி.பி.ஐ. அதிகாரி சஞ்சய் கவுதம் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் அதிகாலையிலேயே பூண்டித்தோப்பு கிராமத்துக்குச் சென்றனர். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி, சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், அவரை காரில் ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் வந்தவர்கள், மத்திய அரசுக்குச் சொந்தமான ஓர் அலுவலகத்தில் வைத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. தமிழகத்தைச் சேர்ந்த பிஎச்.டி. மாணவர் ஒருவர், பிரதமர் மோடி பற்றி, அவரது அலுவலகத்துக்கே அவதூறான இ-மெயில் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறு.


Share it if you like it