சலுகைகளை பறித்து முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுவதுதான் சமூக நீதியா? சமத்துவமா ? – இந்து முன்னணி கேள்வி ?

சலுகைகளை பறித்து முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுவதுதான் சமூக நீதியா? சமத்துவமா ? – இந்து முன்னணி கேள்வி ?

Share it if you like it

இந்து மத வெறுப்பு அரசியலும் பிரிவினையையும் தமது கொள்கையாக வைத்துள்ள திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரு ஆட்சிக்கு வந்தது முதலாக மன்மோகன் ஆட்சி காலம் வரையிலும் பெரும்பாண்மை இந்துக்களை புறக்கணித்து சிறுபான்மையினரை மட்டும் தலையில் தூக்கி வைத்து பிளவு வாதமும் பிரிவினை வாதமும் ஒரு பக்க சார்பாகவும் நடந்து‌ கொண்டுவரும் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சியினர், அனைவருக்குமான வளம் வளர்ச்சி என்று ஆட்சி நடத்திவரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வெறுப்பு அரசியல் செய்வதாக விமர்சிக்க அருகதை இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த தேசத்தின் வளர்ச்சியால் கிடைக்கும் பலன்களிலும் இந்த தேசத்தின் வளங்களிலும் சிறுபான்மையினருக்கே முதல் உரிமை குறிப்பாக இஸ்லாமியர்களுக்கே முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இந்த தேசத்தின் பிரதமராக இருந்த போது கடந்த 2006 ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி கவுன்ஸில் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துகள் அப்போதே சர்ச்சை ஆனது.

காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமர் நேரு அவர்கள் கல்வியால் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் முஸ்லீம் ஒரு விபத்தாக இந்துவாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவர் வழி வந்த காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வாறு பேசியதில் ஆச்சரியமில்லை, அதன் தொடர்ச்சியாக தற்போதைய மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் கூட முஸ்லீம் மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயில அரசே கட்டணம் செலுத்தும் என்று அறிவித்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இந்த தேசத்தின் பெரும்பாண்மை இந்துக்களை புறக்கணித்து சிறுபான்மையினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து பிரிவினை வாதத்தையும் இரு சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி வாக்கு வங்கி அரசியல் செய்வது தொன்று தொட்டு தொடரும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பெரும்பான்மை வாதத்தை எதிர்ப்பதாகவும் அறிவித்துள்ளது. அதாவது இந்த தேசத்தின் பெரும்பாண்மை இந்துக்களை இதுவரையில் புறக்கணித்து வந்ததையும் இனியும் புறக்கணிக்க போவதையும் தான் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளது. அதற்காகதான் கடந்த பத்தாண்டுகளாக மக்களவையில் எதிர்கட்சிக்கான பெரும்பான்மையை கூட இழந்து கிடக்கிறது. உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவதை விடுத்து வெளிநாட்டில் படிப்பதற்கு அரசு கட்டணம் செலுத்தும் என்று காங்கிரஸ் அறிவிக்கிறது. அதுவும் முஸ்லீம் மாணவர்களுக்கு மட்டும் இதன் மூலம் நம் நாட்டு கல்வி நிலையங்களை சிறுமைப்படுத்தி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை உயர்த்தி பிடிக்கிறது.

இத்தோடு நில்லாமல் இருப்பவர்களிடம் இருந்து எடுத்து முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்றும் அறிவித்துள்ளது. இதன் மூலம் உழைப்பால் உயர்ந்தவர்களின் உழைப்பை உறிஞ்சும் துரோகத்தையும் தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அளித்துள்ளது . ஆனால் இந்த தேசத்தின் குடிமக்கள் அனைவரும் இணைந்து அனைவருக்குமான நம்பிக்கை அனைவருக்குமான வளர்ச்சி என்று பாரத பிரதமர் மோதி அவர்கள் 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தியுள்ளார். அதையே முன்வைத்து இப்போதைய தேர்தலை எதிர்கொண்டுள்ளார், ஆனால் காங்கிரஸின் கடந்தகால நிகழ்கால தேசவிரோத தேசிய விரோத பெரும்பான்மை இந்து விரோத கொள்கைகளை செயல்பாடுகளை விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை காங்கிரஸ் கட்சியும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் திரித்தும் திசைதிருப்பியும் பொய்களை பரப்பிக்‌ கொண்டிருக்கிறார்கள்.

இந்து பண்டிகைகளை புறக்கணிப்பது, சனாதனத்தை ஒழிப்பது, கோயிலை இடிப்பது இந்து மத சடங்கு சம்பிரதாயங்களை பிற மத நிகழ்ச்சியில் பங்கு கொன்டு எள்ளி நகையாடுவது, போன்றவை திமுகவின் அன்றாட நிகழ்வாக தொடர்கிறது . மேலும் தமிழக இந்துக்களின் தொன்மையையும் வரலாற்றையும் அழிக்கும் விதமாக தமிழ் புத்தாண்டை மாற்றுவது, வள்ளுவருக்கும் அவ்வை பாட்டிக்கும், வள்ளலாருக்கும் அடையாளமான திருநீறு போன்ற சமய சின்னங்களை அழித்து படம் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது, முதலாக மேடை தோறும் இந்து நம்பிக்கைகளை இழித்து பழித்தும் பேசுவதுதான் வெறுப்பு அரசியல் அந்த வெறுப்பு அரசியல் தான் ஒழிய வேண்டும் ஒழிக்கப்பட வேண்டுமே தவிர அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற தேச ஒற்றுமை வாதம் ஒழிக்கப்பட வேண்டியதல்ல.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன், ஜவாஹிருல்லா போன்றோர் ஒரு படி மேலாக முஸ்லீம் மதத்துக்கு மாறிய பட்டியல் சமூக மக்களுக்கும், இந்து பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களே அது இந்து பட்டியல் சமூக மக்களின் உரிமையை பறிக்கும் செயல் அல்லவா? இஸ்லாமியர்களுக்கு ஹஜ் மானியம் கல்வி உதவி தொகை மதரசா எனும் மதகல்வி நிறுவனங்கள் நடத்துவது முதலாக கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஏராளமான சிறுபான்மை சலுகைகள் வழங்கபட்டு வரும் நிலையில் இந்து பட்டியல் சமூக மக்களின் சலுகைகளை பறித்து முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுவதுதான் சமூக நீதியா? சமத்துவமா? தேச ஒற்றுமை வாதமா???

திமுகவின் தோற்றம் முதலாக இன்று வரையிலும் இந்து மத வெறுப்பு அரசியலும் பிரிவினையையும் தமது கொள்கையாக வைத்துள்ள திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரு ஆட்சிக்கு வந்தது முதலாக மன்மோகன் ஆட்சி காலம் வரையிலும் பெரும்பாண்மை இந்துக்களை புறக்கணித்து சிறுபான்மையினரை மட்டும் தலையில் தூக்கி வைத்து பிளவு வாதமும் பிரிவினை வாதமும் ஒரு பக்க சார்பாகவும் நடந்து‌ கொண்டுவரும் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சியினர், அனைவருக்குமான வளம் வளர்ச்சி என்று ஆட்சி நடத்திவரும் பிரதமர் மோதி அவர்களை வெறுப்பு அரசியல் செய்வதாக விமர்சிக்க அருகதை இல்லை. அதே நேரத்தில் பிரிவினைவாதமும் இந்து மத வெறுப்பு அரசியல் நடத்தும் காங்கிரஸ் திமுகவை வெறுப்பது தவறல்ல அவசியமானதும் கூட எனவே தேச ஒற்றுமைக்கும் தேச வளர்ச்சிக்கும் தேசிய உணர்விற்கும் எதிரான திமுக-காங்கிரஸ் கட்சிகளின் நாடகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் அவர்களின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும், இந்த தேர்தல் மட்டுமல்லாது எல்லா தேர்தல்களிலும் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *