புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற எதிர்க்கட்சிகளின் முடிவு துரதிருஷ்டவசமானது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.ஜெய்சங்கர். இவர், இரண்டு நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றுள்ளார். இதையடுத்து, நர்மதா மாவட்டத்தில் உள்ள ராஜ்பிப்லா நகரில் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார் :
“புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். இதில் சர்ச்சையை உருவாக்கக் கூடாது. ஆனால், இது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. சிலர் இதை சர்ச்சைக்குரியதாக ஆக்க முயல்கிறார்கள். ஆனால், அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒட்டுமொத்த நாடும் இணைந்து இதனை திருவிழாவாகக் கொண்டாட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.