பார்லிமென்டுக்கு தலைவர் ஜனாதிபதியாம்… நிருபருக்கு தரமான பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

பார்லிமென்டுக்கு தலைவர் ஜனாதிபதியாம்… நிருபருக்கு தரமான பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

Share it if you like it

பார்லிமென்டுக்கு தலைவராக ஜனாதிபதி இருக்கும்போது, பிரதமர் ஏன் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நிருபருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்தியாவின் புதிய பார்லிமென்ட் கட்டடம் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்படுகிறது. ஆனால், புதிய பார்லிமென்டை பிரதமர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தும், குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழக கவர்னர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

அப்போது ஒரு நிருபர், பார்லிமென்டுக்கு தலைவராக ஜனாதிபதி இருக்கிறார். அப்படி இருக்கும்போது பிரதமர் ஏன் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், சத்தீஸ்கரில் புதிய சட்டமன்ற கட்டடத்தை கட்டி திறப்பு விழா நடத்தினார்கள். அப்போது, அம்மாநிலத்தின் கவர்னரை அழைத்து கட்டடத்தை திறக்கவில்லை. முதல்வரும் திறக்கவில்லை. மாறாக, எந்த பதவியிலுமே இல்லாத சோனியா காந்தியை அழைத்து அக்கட்டடத்தை திறந்து வைத்தார்கள். அப்படி இருக்கும்போது, பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் திறப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று தரமான பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானாவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவால் திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, நாட்டுக்கு முதல் குடிமகன் ஜனாதிபதி என்பதுபோல, ஒரு மாநிலத்துக்கு முதல் குடிமகன் கவர்னர்தான். அப்படி இருக்க, கவர்னரையே விழாவுக்கு அழைக்காமல், மாநில முதல்வரே சட்டமன்றத்தை திறந்து வைத்திருக்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பவே, நிருபர் கப்சிப்.


Share it if you like it