ஹோலி கொண்டாட எதிர்ப்பு: பல்கலை.யில் பரபரப்பு!

ஹோலி கொண்டாட எதிர்ப்பு: பல்கலை.யில் பரபரப்பு!

Share it if you like it

டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழத்தில் ஹிந்து மாணவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட இஸ்லாமிய மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாகவே, ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவது இஸ்லாத்தில் ஹராம் என்று கருதப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ஹிந்து பண்டிகையின்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். உதாரணமாக, ஹனுமன் ஜெயந்தி, ராம நவமி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை போன்ற ஹிந்து மத பண்டிகைகளின்போது நடந்த ஊர்வலங்களில் கல் எறிதல், தீ வைப்பு போன்ற சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால், அப்பண்டிகைகள் கலவரத்தில் முடிவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் 8-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி, டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் (ஜே.எம்.ஐ.யு.) யுவா பிரிவு சார்பில், ‘ரங்கோத்சவ்’ என்கிற பெயரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு கடந்த 1-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, ஹிந்து மாணவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்லாமிய மாணவர்கள், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அல்லாஹு அக்பர், நாரா இ தக்பீர் என்று கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக ஊழியர்களையும் மிரட்டினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோக்கள் இதோ…


Share it if you like it