எந்த நேரத்திலும் ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார்

எந்த நேரத்திலும் ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார்

Share it if you like it

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370- வது பிரிவு சிறப்பு அந்தஸ்து பிரிவை மத்திய அரசு 2019- ஆம் ஆண்டு ரத்து செய்த்து. ஜம்மு- காஷ்மீர், ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில் ஜம்மு-கஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தலைமை நீதிபதி கேட்டதற்கு பதிலளித்த செலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா அதற்காக காஷ்மீரை முழுமையாக தயார் படுத்த வேண்டும் என தெரிவித்தார். எப்போது வேண்டுமானலும் தேர்தலை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெவித்தார்.


Share it if you like it