கணித மேதை சுப்பைய்யா சிவசங்கரன் பிள்ளை

கணித மேதை சுப்பைய்யா சிவசங்கரன் பிள்ளை

Share it if you like it

சுப்பைய்யா பிள்ளை, கோமதி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் சுப்பைய்யா சிவசங்கரன் பிள்ளை. இவர் 05.04.1901ம் ஆண்டு வல்லத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஒரு வருடத்திலேயே இவர் தாயார் இறந்தார். பள்ளிப்படிப்பின் கடைசி வருடத்தில் இவர் தந்தை இறந்தார். இவர் இடைநிலைப் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, நாகர்கோவில் ஸ்காட் கிருத்துவக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார். பின் ஒருவாறாக திருவனந்தபுரம் மஹாராஜாக் கல்லூரியில் கலை இளங்கலை படிப்பை முடித்தார். 1927 ல் கே.ஆனந்தராவ், ராமசாமி எஸ். வைத்யநாதன் இவர்களுடன் சேர்ந்து ஆராய்ச்சிப் பணி செய்ய இவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் உதவ முன் வந்தது. 1929 முதல் 1941ம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். இங்கு தான் வாரிங்ஸ் ப்ராபளம் (waring’s problem)சம்பந்தமாக நிறைய பணிகள் செய்தார். 1941 ஆண்டு பின்பகுதியில் திருவாங்கூர் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் அங்கு சென்றார். 1942 ஆம் ஆண்டு திரு.பிரடரீஸ் வில்ஹெம் அழைப்பின் பேரில் கல்கத்தா பல்கலைக் கழகம் சென்று விரிவுரையாகப் பணி செய்தார். 1945 ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது அறிவின் மேன்மைக் கண்டு ஆகஸ்ட் 1950 ம் ஆண்டு மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், பிரின்ஸ்டன், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒரு வருட கால அளவில் இவரை அழைத்தது. அங்கு சென்று தனக்கென ஒரு இடம் பிடித்தார். பின் சென்னை பல்கலைக் கழகம் சார்பில் ஹார்டுவேர் பல்கலைக் கழகத்தில் நடந்த சர்வதேச கணித மாநாட்டில் பங்கேற்க சென்றார்.

இவர் ஒரு சிறந்த கோல்ப் வீரர் ஆவார்.

திரு. சாவ்லா அவர்களும் இவரும் சேர்ந்து கணிதத் துறைக்கு திரு. இராமாநுஜருக்குப் பின் நிறைய பங்களிப்பைத் தந்துள்ளனர். எண் கோட்பாடு கணக்கீடுகளில் நிறைய விடை தெரியாதவைகளுக்கு விடை கண்டு நமக்கு அர்ப்பணித்துள்ளனர். தொடர்ச்சியான எண்கள், பாஸிடிவ் இன்டீஜேர்ஸ் பவர்ஸ், யூக கணிதங்கள், கோடான்ஜென்ட் செயல்பாடு, மேட்ரிஸஸ், பைனைட்டு குரூப்புகள் என பலவாறான பிரிவுகளில் வரும் சந்ததியினர் அறியும் படி தங்களது பங்களிப்பைத் தந்து கணிதத்தை மேன்மை படுத்தியுள்ளனர்.

பிள்ளைக்குப் பேர் சேர்த்த அவரது படைப்புக்கள்:

பிள்ளை யூகம்

பிள்ளை எண் கணித செயல்பாடு

பிள்ளை முதன்மை கோட்பாடு

:(pillai conjucture)

: (pillai arithmetic function)

: (pillai prime)

பிள்ளை வரிசை

:(pillai sequence)

இவர் 31.8.1950 ம் ஆண்டு கெய்ரோ, எகிப்தில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தார்.

மு.வெ.சம்பத்


Share it if you like it