குலம் காக்கும் குலதெவம் – கடல் தாண்டி போனாலும் குலதெய்வ நிழல் தாண்டி போக முடியாது

குலம் காக்கும் குலதெவம் – கடல் தாண்டி போனாலும் குலதெய்வ நிழல் தாண்டி போக முடியாது

Share it if you like it

ஒரு நொடியில் தப்பித்தேன் மயிரிழையில் உயிர் பிழைத்தேன் என்று சொல்வோமே அந்த ஒரு நொடியும் மயிரிழையும் போல நம்மை இடரிலிருந்து காப்பது தான் நம் குல காவல் தெய்வத்தின் அனுகிரகம். நாம் கூப்பிட்ட குரலுக்கு முதலில் ஓடோடி வந்து நம்மை காப்பது நம் குல தெய்வமே குலதெய்வம் வரும்போது தான் காவல் தெய்வமும் வந்து நிற்கும். அதன் பிறகு தான் நாம் மனையில் இருக்கும் தெய்வம் தேவதைகள் கிராம தேவதைகள் நம் இஷ்ட ஆராதனை தெய்வங்கள் எழுந்தருளி நம்மை அரவணைக்கும்

குலதெய்வம் இல்லாத இடத்தில் காவல் தெய்வம் இருக்காது இந்த இரண்டு தெய்வங்களும் இல்லாத இடத்திற்கு மனை தெய்வமோ கிராம தேவதைகளை ஆராதனை தெய்வங்களும் எழுந்தருளாது எங்கு குல காவல் தெய்வங்களுக்கு உரித்தான பூஜை சிரத்தையோடு நடைபெறுமோ அவர்கள் செய்யும் திதி தர்ப்பணம் தான் முன்னோர்களுக்கு போய் சேரும் அவர்களின் வம்சம் விருத்தியாகும் அவர்கள் செய்யும் ஹோமம் பரிகார பூஜைகள் தான் முழுமையாக பலன் தரும்.

குல காவல் தெய்வங்கள் குறையோடு இருக்கும் இடத்தில் நாம் செய்யும் முன்னோர் திதி தர்ப்பணம் ஹோமம் பூஜை பரிகாரம் எதுவும் பலன் தராது நாம் இஷ்ட ஆராதனை தெய்வங்களுக்கு எவ்வளவுதான் நாம் விசேஷ பூஜைகள் செய்தாலும் கூட அது நமக்கு முழுமையான பலனை தராது

அதனால்தான் நம் இந்து தர்மத்தில் பூஜை வழிபாட்டு முறைகளில் முதலிடம் அவரவர் குடும்பத்தின் குலம் காக்கும் பெண் தெய்வங்களான குலதெய்வமும் ஆயுதமேந்தி காவல் காக்கும் ஆண் தெய்வமான காவல் தெய்வமும் முதலிடம் பெறுகிறது

ஒரு சிலர் சொல்வார்கள் நான் எவ்வளவு கோவிலுக்கு போகிறேன்? இவ்வளவு கைங்கர்யம் செய்கிறேன்? பக்தியோடு தினமும் பூஜை செய்கிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை .ஆனாலும் எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை ? இவ்வளவு கஷ்டம் என்று புரியவில்லை? கடவுள் கூட நல்லவர்களுக்கு உதவ மாட்டார் போல என்று சலித்துக் கொள்வார்கள். அவர்களிடத்தில் உங்களின் குலதெய்வம் எது? காவல் தெய்வம் எது? என்று கேட்டுப்பாருங்கள் அப்படியா ? அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை .நாங்கள் இதுவரை அப்படி எந்த பூஜையும் செய்ததும் இல்லை என்றுதான் பதில் வரும்.

குல தெய்வம் காவல் தெய்வம் இரண்டும் நம்மை எப்போதும் உடனிருந்து காக்கும் பாதுகாப்பு கவசங்கள் ஆகும் சில நேரங்களில் நமக்கு கோட்சார கிரகங்களினால் சில இடையூறுகள் வரக்கூடும் ஜனன ஜாதகத்தில் எவ்வளவோ இடர்பாடுகள் இருக்கலாம் இதையும் கடந்து நமக்கு வேண்டாதவர்கள் நம் வளர்ச்சியின் பொறுக்க முடியாமல் மாந்திரீகம் ஏவல் பில்லி சூனியம் என்று எவ்வளவு கெடுதல்களை செய்யலாம் ஆனால் இந்த அத்தனை கெடுதலையும் முறியடித்து தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகிறது என்பது போல நம்மையும் நம் குடும்பத்தையும் எப்போதும் உடன் இருந்து காத்து ரட்சிப்பது நம் குல காவல் தெய்வங்களே அதனால்தான் நாடாளும் மன்னன் என்றாலும் நெருக்கடியான காலங்களில் முதலில் தன் குல காவல் தெய்வங்களை வணங்கிய அதன்பிறகு ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு விமோசனம் தேடி நிற்பான்

இன்றளவும் கிராமங்களில் பெரும்பாலும் குலதெய்வ பூஜைகள் வழிபாடுகள் நடக்கிறது ஆனால் பெரும்பாலான மக்கள் வேலை அலைச்சல் என்று காரணம் காட்டி வெளியூரிலிருந்து போய் வரும் செலவை காரணம் காட்டி இது போன்ற காவல் தெய்வ பூஜைகளை தட்டிக் கழிப்பது கண்முன்னே பார்க்கிறோம் பிறகு ஏதாவது ஒரு நெருக்கடி காலத்தில் அவர்கள் புலம்புவதையும் பார்க்கிறோம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்? கஷ்டம் வரும்போது தான் கடவுளை அழைப்பேன் என்றால் அது எவ்வளவு பெரிய சுயநலம்? சுயநலம் மட்டுமே இருக்கும் இடத்தில் பக்தி எப்படி இருக்கும்? பக்தி இல்லாத இடத்தில் குல காவல் தெய்வங்கள் எப்படி வரும்?

நம் குல காவல் தெய்வங்களை புறம் தள்ளிவிட்டு எவ்வளவு தூரம் எத்தனை தெய்வங்களை தேடித்தேடி வணங்கினாலும் எவ்வளவு கைங்கரியம் செய்து வந்தாலும் கூட அவை எல்லாம் நமக்கு பலன் தர வரும்போது அதை நமக்கு முழுவதுமாக பெற்றுத்தரும் தாய் உள்ளமே நம் குல காவல் ‌தெய்வ அனுகிரகம் தான் .

நம் முன் முன் வினைப் பயன் முன்னோர் வினைப்பயன் என்று நாம் ஏதேனும் கொடும் துயரை எதிர்கொள்ளும் வேளையில் அதற்குரிய தெய்வம் தேவதைகளிடம் மன்றாடி நமக்கான விமோசனத்தை பெற்றுத் தரவல்லது நம்குல காவல் தெய்வங்கள் மட்டுமே குல காவல் தெய்வங்கள் அனுகிரகம் இல்லாத இடத்தில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் அதன் பலன் நமக்கு வந்து சேராது அதனால்தான் நம் முன்னோர் நம் வழிபாட்டு முறையில் உள்ள காவல் தெய்வ வழிபாட்டை பிரதான முறையாக செய்து வந்தார்கள் நம்மையும் அப்படியே செய்ய பழகிப் போனார்கள்.

காலச்சூழலில் பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு என்று இடம் பெறுவதை காரணம் காட்டி என்று பலரும் குலதெய்வ வழிபாட்டை செய்ய கலந்து கொள்ள தவறுவதும் நவ நாகரீகம் என்ற பெயரில் குலதெய்வ பூஜைகள் உதாசீனம் செய்வதையும் கண்முன்னே பார்க்கிறோம் .ஆண்களே நீங்கள் சந்திரமண்டலம் போய் ஆய்வுக்கூட செய்யுங்கள் ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தில் காலை மாலை இருவேளையும் உங்கள் குல தெய்வங்களை காவல் தெய்வங்களை மனதில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு அன்றைய வேலையைத் தொடருங்கள் அது போதும் .

பெண்களே நீங்கள் நாட்டுக்கு ராணியாக கூட இருங்கள் ஆனால் ஒரு வீட்டின் மகள் மறு வீட்டின் குலமகள் கணவனுக்கு மனைவி பிள்ளைகளுக்கு தாய் என்பதை மறந்து விட வேண்டாம் நாமும் நம் குடும்பமும் நம் வம்சமும் நலம் பெற வேண்டுமெனில் நமக்கு உற்ற துணையாக இருப்பது குல காவல் தெய்வங்களும் அதன் அனுக்கிரகமும் தான் என்பதை உணர்ந்து குல காவல் தெய்வ வழிபாட்டை முன்னெடுங்கள் குழந்தைகளுக்கும் அதன் உன்னதத்தை சொல்லி புரிய வைத்து அவர்களையும் அந்த வழிபாட்டில் கொண்டு சேருங்கள்

குல காவல் தெய்வங்களுக்கு தினசரி பூஜை பௌர்ணமி அமாவாசை தினங்களில் மாதாந்திர பூஜை சித்திரை வைகாசி ஆடி ஆவணி மார்கழி மாசி மாதங்களில் ஏதேனும் ஒரு மாதத்தில் வருட பூஜை என்று அவரவர் வசதிக்கு ஏற்ப அவரவர் குல வழக்கத்திற்கு ஏற்ப பழகிக் கொள்ளுங்கள் அந்த கட்டமைப்பிலிருந்து நீங்களும் வெளிவராது உங்கள் பிள்ளைகளும் வெளிவராது பழக்கி விடுங்கள் அது ஒன்றே உங்களை பத்மவியூகம் போல் உடனிருந்து காக்கும்

மணமாகிய பெண்கள் திருமணம் முடிந்த பிறகு தாய் வீட்டில் குல தெய்வத்தை வணங்க தேவையில்லை என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது அது முற்றிலும் தவறு பெண்களே நம் மாங்கல்ய பாலம் காப்பதிலும் புகுந்த வீட்டில் நமக்கு வரும் இடர்களை எல்லாம் தடுத்து நம்மை பாதுகாப்பதிலும் முதலிடம் வகிப்பது நம் பிறந்த வீட்டு காவல் தெய்வங்கள் தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்களின் பிறந்த வீட்டு குல காவல் தெய்வங்களின் வழிபாட்டு தலங்களுக்கு போய் தவறாது பூஜை செய்து வாருங்கள் முடியாதபட்சத்தில் இருக்கும் இடத்திலேயே தினமும் பிரார்த்தனை செய்யுங்கள் தினசரி மாதாந்திர வருட பூஜையை தொடர்ந்து செய்து வாருங்கள் அது உங்களுக்கு மட்டுமல்ல உங்களின் மூலமாக உங்களின் குடும்பத்திற்கும் எவ்வளவு தூரம் பாதுகாப்பு கொடுக்கிறது?என்பதை கண்கூடாக உணர்வீர்கள்.


Share it if you like it