காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவும் சம்பவம் அரங்கேறி வருகின்றன. இவர்களை இந்திய பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை செய்வதும், மீறி ஊடுருவினால் என்கவுன்ட்டர் செய்தும் வருகின்றனர். இந்த சூழலில், பூஞ்ச் மாவட்டத்தின் பால்கோட் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் ஊடுருவ முயன்றார். அவரை பாதுகாப்புப் படையினர் பலமுறை எச்சரித்தனர். ஆனால், அவர் கேட்காமல் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவினார். இதையடுத்து, அந்த நபரை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அந்த நபர் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், சுட்டதில் பலத்த குண்டுக் காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்து விட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.