நபியை எதிர்ப்பவர்கள் கழுத்தை அறுப்போம்: ஜம்மு மசூதியில் அடிப்படைவாதிகள் கொக்கரிப்பு!

நபியை எதிர்ப்பவர்கள் கழுத்தை அறுப்போம்: ஜம்மு மசூதியில் அடிப்படைவாதிகள் கொக்கரிப்பு!

Share it if you like it

முகமது நபியையும், ஹிஜாப்பையும் எதிர்ப்பவர்களின் கழுத்தை அரசு பிடிக்கவில்லை என்றால், அந்தக் கழுத்தை நாங்கள் அறுப்போம். நுபுர் ஷர்மாவை பொறுத்தவரை, அவளது தலை அங்கேயும், உடல் இங்கேயும் காணப்படும் என்று ஜம்மு மசூதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொக்கரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தில் ஊடுருவி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு பாதுகாப்பு படையினரை நியமித்திருக்கிறது. இப்படையினர், ராணுவம் மற்றும் மாநில போலீஸாருடன் இணைந்து பயங்கரவாதிகளை என்கவுன்ட்டர் செய்து வருகின்றனர். கணிசமான பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளப்பட்டதோடு, ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு பயந்து காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்கள் மற்றும் ஹிந்துக்கள் சொந்த மாநிலத்துக்கே புலம் பெயர்ந்து வருகின்றனர். மேலும், காஷ்மீரி பண்டிட்களை மீள் குடியேற்றம் செய்ய மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்தான், காஷ்மீர் சுதந்திர போராளிகள் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்கள் உள்ளிட்ட ஹிந்துக்களை குறிவைத்து கொலை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், அச்சத்தில் இருக்கும் பண்டிட்களும், ஹிந்துக்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து மீண்டும் வெளியேறத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும், தங்களுக்கு பாதுகாப்புக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, ஒருபுறம் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்கள் மற்றும் ஹிந்துக்கள் வெளியேறுவதை தடுத்து வரும் பாதுகாப்புப் படையினர், இன்னொரு புறம் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பா.ஜ.க.வைச் சேர்ந்த தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா. அப்போது, இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சிவலிங்கத்தை இழிவாகப் பேசினார். இதனால், இஸ்லாமிய மத புத்தகத்தில் முகமது நபி பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் தகவலைக் கூறினார் நுபுர் ஷர்மா. இந்த விவகாரம், இந்தியாவிலுள்ள சில அடிப்படைவாதிகளால் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு பார்வேர்டு செய்யப்பட்டது. இதையடுத்து, அரபு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, சர்ச்சையை கிளப்பிய நுபுர் ஷர்மா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த சூழலில்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவிலுள்ள மசூதி ஒன்றில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒன்றுகூடி இருக்கிறார்கள். அப்போது, இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய அடிப்படைவாத தலைவர்கள், முகமது நபியை பழிப்பவர்கள், ஹிஜாப்பை எதிர்ப்பவர்களின் கழுத்தை அரசு இறுகப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது கழுத்தை நாங்கள் அறுப்போம். மேலும், முகமது நபி பற்றி இழிவாகப் பேசிய நுபுர் ஷர்மாவின் தலை அங்கு கிடக்கும். உடல் இங்கு கிடக்கும் என்று கொக்கரித்திருக்கிறார்கள். இதைக் கேட்டு கூடியிருந்த கூட்டமும் கொக்கரித்தது. இந்த சம்பவம்தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it