சட்டக்கல்லூரி மாணவன் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இன்று வரை கண்டனம் தெரிவிக்காத ஆளூர் ஷநவாஸ், ஜவாஹிருல்லாஹிற்கு, குவிந்து வரும் கண்டனங்கள்.
சென்னன: கடந்த 13 – ஆம் தேதி இரவு கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சட்டக்கல்லூரி மாணவரான வியாசர்பாடியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் முக கவசம் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவருக்கும், போலீசாருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அப்துல் ரஹீமை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பிளாஸ்டிக் பைப்பால் மிக கடுமையாக தாக்கிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காணலாம்.
சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் மட்டுமே தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர். பா.ஜ.க, மத்திய அரசு, பிரதமர் மோடி என்றால், உடனே குரல் கொடுக்கும் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷநவாஸ், பாபநாச சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் ஏன்? அநீதி இழைக்கப்பட்ட மாணவனுக்கு இன்று வரை நீதி கேட்கவில்லை இவர்களின் நோக்கம் பா.ஜ.க-வை விமர்சனம் செய்வது மட்டும் தானா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.