அடிபைப்பை புதைத்து சிமென்ட் சாலை… திராவிட மாடல் பணிகளுக்கு எண்டு கார்டே கிடையாதா?!

அடிபைப்பை புதைத்து சிமென்ட் சாலை… திராவிட மாடல் பணிகளுக்கு எண்டு கார்டே கிடையாதா?!

Share it if you like it

வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அடிபைப்பை புதைத்து சிமென்ட் சாலை அமைத்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மாதவச்சேரி கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயில் தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் அடிபைப் பொறுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தெருவில் 5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது, மேற்கண்ட அடிபைப்பை புதைத்து சிமென்ட் சாலையை அமைத்து விட்டார்கள். இதனால், இப்பகுதி மக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, மேற்கண்ட அடிபைப்பை சரி செய்து தருமாறு கூறி, மேற்கண்ட சாலையை அமைத்த கான்ட்ராக்டரிடமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும் மேற்படி கிராம மக்கள் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால், இரு தரப்பினருமே இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. இதனால், கிராம மக்கள் கடும் அதிருப்தியிலும், ஆத்திரத்திலும் இருந்து வருகிறார்கள். மேலும், அடிபைப்பை புதைத்து சிமென்ட் சாலை அமைத்த கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைக் கண்ட நெட்டிசன்கள், திராவிட மாடலுக்கு என்டு கார்டே கிடையாது என்று கலாய்த்து வருகிறார்கள்.


Share it if you like it