பட்டியல் சமூக பஞ். தலைவர் தேசியக்கொடி ஏற்ற எதிர்ப்பு: தி.மு.க. ஆட்சியில் மறுக்கப்படும் சமூகநீதி!

பட்டியல் சமூக பஞ். தலைவர் தேசியக்கொடி ஏற்ற எதிர்ப்பு: தி.மு.க. ஆட்சியில் மறுக்கப்படும் சமூகநீதி!

Share it if you like it

காஞ்சிபுரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக்கொடி ஏற்றவிடாமல் தடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூகநீதி பற்றி வாய்கிழியப் பேசும் தி.மு.க. ஆட்சியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்துத் தலைவர் வரை அவமதிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அமர்வதற்கு சேர்கூட தருவதில்லை என்றெல்லாம் புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக்கொடியேற்ற விடாமல் தடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது திருப்புட்குழி ஊராட்சி. இதன் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுகுணா. தலைவராகப் பதவியேற்ற இவரை, சிலர் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் சுகுணா அளித்த புகாரின்பேரில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு உட்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்தனர். ஆனால், இதுவரை குற்றம் சாட்டப்பட்ட யாரும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், நாட்டின் 74-வது குடியரசு தினவிழா கடந்த 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த, தலைவர் சுகுணா, தொடர்ந்து, ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்ற சென்றார். அப்போது, ஏற்கெனவே தலைவர் சுகுணாவை, தரக்குறைவாக பேசிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பாலச்சந்தர், செல்வம் உள்ளிட்டோர் கொடியேற்ற விடாமல் தடுத்திருக்கிறார்கள்.

மேலும், சுகுணாவை மீண்டும் தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். அதோடு, சுகுணாவை தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர். இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் சுகுணா புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் தலைவரை, தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல, தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it