அதிக பெண் விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கனிமொழி. இவர், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும், ஒரு தவறு நடந்தால் உடனே கண்டன அறிக்கை வெளியிடுவார். அந்த வகையில், உ.பி.யில் யாரோ ஒருவன் செய்த தவறுக்கு சென்னையில் மெழுவர்த்தி ஊர்வலம் நடத்தி நாடகம் நடத்தியவர் கனிமொழி. இவரது, கட்சியை சேர்ந்த கழக கண்மணிகள் செய்யும் அட்டூழியங்களையும், அடாவடிகளையும் கண்டும் காணாமல் இருப்பதே இவரது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலேயே அதிக விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என கனிமொழி பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டதொடரில் டாஸ்மாக் வருமானத்தை 45,000 கோடியில் இருந்து 50,000 கோடியாக உயர்த்த விடியல் அரசு திட்டமிட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த அட்டூழியம் குறித்து அக்கா கனிமொழி எப்போது பேசுவார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

https://twitter.com/ikkmurugan/status/1637804017861685248