வீட்டில் கஞ்சா வளர்த்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. இதனால், இளம் பெண்கள், கல்லூரி மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகும் சம்பவங்களும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், சென்னையை அடுத்திருக்கும் தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியில் உயர்ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து இருக்கிறது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் ரகசியமாக ஆய்வு செய்து இருக்கின்றனர்.
இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில், பல திடுக்கிடும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்து இருக்கிறது.
பொறியியல் பட்டதாரியான சக்திவேல் டிரேடிங் தொழில் செய்து வந்திருக்கிறார். எனினும், அவர் எதிர்பார்த்த படி தொழிலில் வருமானம் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில், தான் சம்பாதித்த அனைத்துப் பணத்தையும் டிரேடிங் தொழிலில் சக்திவேல் இழந்திருக்கிறார். இதனை தொடர்ந்து, மாற்று வழியில் பணம் சம்பாதிக்க அவர் திட்டம் தீட்டியிருக்கிறார்.
இதையடுத்து, யூடியூப் வழியாக உயர்ரக கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்ற காணொளியை பார்த்து இருக்கிறார். அதன்படி, கஞ்சா செடிக்கு தேவையான அனைத்தையும் கிரிப்டோகரன்சி வாயிலாக இணையத்தில் ஆடர் செய்து பெற்று இருக்கிறார்.
இதையடுத்து, மாடம்பாக்கத்தில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு ஒன்றை சக்திவேல் எடுத்துள்ளார். அந்த வீட்டில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் தான் கஞ்சா செடியை வளர்த்து வந்ததை சக்திவேல் காவலர்களிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.