மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஹிந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி!

மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஹிந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி!

Share it if you like it

ஹிந்து குடும்ப சங்கம் நிகழ்ச்சி சேலம் கோட்டத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ். சேலம் கோட்டம் சார்பாக நேற்றைய தினம் 04.03.2023 சனிக்கிழமை மாலை 6.00 துவங்கி இரவு 9.30 மணிவரை தேசிய சேவா சமிதி வளாகத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்தவகையில், இன்று காலை 6.30 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கி மதியம் 1.00 மணி வரை ஶ்ரீ தன்வந்திரி மஹா ஹோமம் 22-ம் வருடமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில், சுமார் 3,000 பேர் வரை கலந்து கொண்டனர்.

அந்தவகையில், மாற்று திறனாளிகள் 98 பேர் கலந்து கொண்டனர். விழாவினை சேலம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் Er.செந்தில்குமார், ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் க.குமாரசாமி மற்றும் தன்வந்திரி ஆசிரமம் டிரஸ்ட் சார்பாக திரு.சுந்தர்ராஜன், பிருதிவிராஜ் மற்றும் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் விழாவினை சிறப்பாக செய்தனர். ஶ்ரீ குணசேகரன் பட்டாச்சார்யா ஹோம நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it