பாவமன்னிப்பு வழங்குவதாகக் கூறி ‘பாவம்’ செய்த பாதிரியார்: பலான வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!

பாவமன்னிப்பு வழங்குவதாகக் கூறி ‘பாவம்’ செய்த பாதிரியார்: பலான வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!

Share it if you like it

ஒரு பெண்ணுடன் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைந்திருக்கிறது. இங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இந்த பாதிரியார்தான் மேற்படி தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களுக்கு பாவமன்னிப்பு வழங்குவாராம். அப்படி பாவமன்னிப்புக் கேட்டு வரும் பெண்களிடம், அந்த பாதிரியார் டபுள் மீனிங்கில் பேசுவது வழக்கமாக இருந்திருக்கிறது. மேலும், பெண்களுக்கு முத்தம் கொடுப்பது, சில்மிஷத்தில் ஈடுபடுவது என அத்துமீறி வந்திருக்கிறார். இது தொடர்பாக பல பெண்கள் தலைமை பாதிரியாரிடம் புகார் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேவாலயத்துக்கு வந்த கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த பாவமன்னிப்பு வழங்கும் பாதிரியாரை தாக்கி, அவரது லேப்டாப்பை பறித்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து பாதிரியார் போலீஸில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இந்த சூழலில், மேற்படி பாவமன்னிப்பு பாதிரியார், ஒரு பெண்ணுக்கு லிப்லாக் கிஸ் கொடுப்பதும், கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடுவதும், நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, பாதிரியாரிடமிருந்து லேப்டாப்பை பறித்துச் சென்ற கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பாதிரியாரின் லேப்டாப்பில் இதுபோன்ற ஏராளமான வீடியோக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை ஒவ்வொன்றாக வெளியிட மேற்படி கும்பல் திட்டமிட்டிருக்கிறதாம். இதையறிந்த பாதிரியார் பதறிப் போய் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறாராம்.


Share it if you like it