ஹாட்ரிக் கிராமி விருது: இந்திய இசையமைப்பாளர் அசத்தல்!

ஹாட்ரிக் கிராமி விருது: இந்திய இசையமைப்பாளர் அசத்தல்!

Share it if you like it

பெங்களூருவைச் சேர்ந்த இசையமப்பாளர் ரிக்கி கேஜ், தொடர்ந்து 3-வது முறையாக கிராமி விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

உலகளவில் இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், ‘Divine Tides’ ஆல்பத்திற்காக பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளரான ரிக்கி கேஜுக்கு கிராமி விருது கிடைத்திருக்கிறது. இந்த ஆல்பத்தில், ‘தி போலீஸ்’ என்கிற பிரிட்டிஷ் ராக் இசை குழுவைச் சேர்ந்த டிரம் வாசிப்பாளர் ஸ்டூவர்ட் கோப்லேண்ட் என்பவரும் இணைந்து பணியாற்றினார். ஆகவே, இந்த விருதை இருவரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கடந்தாண்டும் இவர்களுக்கு கிராமி விருது கிடைத்தது.

அமெரிக்காவில் பிறந்த ரிக்கி கேஜ், தொடர்ந்து 3-வது முறையாக இந்த கிராமி விருதை பெறுகிறார். நாமினேஷனின் போது ரிக்கி கேஜ் கூறுகையில், “எங்களின் ஆல்பம் டிவைன் டைட்ஸுக்காக 2-வது முறையாக நாமினேட் செய்யப்பட்டது பெருமையான விஷயம். இந்திய இசையை அங்கீரித்து, இந்த உயரிய விருதுக்கு பரிந்துரை செய்யதில் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த விருது என்னை மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கும்” என்றார். கிராமி விருது பெற்ற இளம் இந்தியர் என்கிற பெருமையை ரிக்கி கேஜ் பெற்றிருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு ‘Winds of samsara’ ஆல்பத்திற்காக முதல்முறையாக கிராமி விருது பெற்றார் ரிக்கி கேஜ்.

கிராமி விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் ரிக்கி கேஜ், “3-வது கிராமி விருதை வென்றிருக்கிறேன். பேச வார்த்தையே வரவில்லை. இந்த விருதை இந்தியாவுக்கு சமர்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ரிக்கியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், “உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது ரிக்கி. கிராமி விருது வென்ற 4-வது இந்தியர் நீங்கள். மேலும் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தர வாழ்த்துக்கள்” என்று தெரிவித்து வருகிறார்கள்.


Share it if you like it