புர்கா போடாததால் முஸ்லீம் மாணவிகளை பஸ்ஸில் ஏற்ற மறுத்த டிரைவர்!

புர்கா போடாததால் முஸ்லீம் மாணவிகளை பஸ்ஸில் ஏற்ற மறுத்த டிரைவர்!

Share it if you like it

கர்நாடகாவில் புர்கா போடாததால் முஸ்லீம் மாணவிகளை பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம் கமலாபூர் தாலுகாவில் உள்ளது ஒகாலி கிராமம். இங்கிருந்து பசவகல்யாண் நகருக்கு தினமும் பள்ளிக் குழந்தைகள் சென்று வருவது வழக்கம். இந்த சூழலில், பசவகல்யாண் – கலபுராகி வழித்தடத்தில் செல்லும் KA 38 F 1074 என்கிற எண் கொண்ட பேருந்தில் மாணவிகள் ஏறி இருக்கிறார்கள். அப்போது, அப்பேருந்தின் டிரைவர், அனைத்து முஸ்லீம் மாணவிகளும் புர்கா அணிய வேண்டும். அப்போதுதான் பேருந்தில் ஏற்றுவேன் என்று கூறியிருக்கிறார்.

அதன்படி, மாணவிகளும் புர்காவை அணிந்துகொண்டு பஸ்ஸில் ஏறினர். அதேசமயம், ஒரு மாணவி மட்டும் புர்கா அணியாமல் வெறும் ஹிஜாப் அணிந்தபடி பேருந்தில் ஏற முயற்சித்திருக்கிறார். உடனே, அப்பேருந்தின் டிரைவர் நீ முஸ்லீமா, உன் பெயர் என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அம்மாணவி பதிலளிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பேருந்தின் டிரைவர், அம்மாணவியை திட்டியதோடு, பேருந்திலும் ஏறவிடவில்லை.

இதைக்கண்ட அங்கிருந்த சிலர், மேற்கண்ட காட்சியை வீடியோ எடுத்திருக்கிறார்கள். பின்னர், அந்த மாணவிகளிடமும் விசாரித்திருக்கிறார்கள். அப்போது, ஒரு முஸ்லீம் மாணவி, எனது பெயரை கேட்டார். நான் சொல்லவில்லை. பிறகு, நீ ஒரு முஸ்லிம், நீ புர்கா அணிய வேண்டும் என்று சொன்னார். மேலும், புர்கா அணியாவிட்டால் பேருந்தில் ஏற முடியாது என்று சொல்லி திட்டினார் என்று கூறியிருக்கிறார். புர்கா அணியாததற்காக முஸ்லீம் மாணவிகளை பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it