தொடரும் ஹிஜாப் போராட்டம்: 23 மாணவிகள் சஸ்பெண்ட்!

தொடரும் ஹிஜாப் போராட்டம்: 23 மாணவிகள் சஸ்பெண்ட்!

Share it if you like it

கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. ஹிஜாப் அணிய அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 23 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் பி.யு. கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர், கடந்த ஜனவரி மாதம் திடீரென சீருடைக்கு மேல் ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவற்றை அணிந்து வந்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்ததால், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஹிந்து மாணவ மாணவிகள், ஹிஜாப் அணிய அனுமதித்தால் நாங்களும் காவித்துண்டு மற்றும் காவி ஷால் அணிந்து வருவோம் என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்கவே, கல்வி நிறுவனங்களில் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது மாநில அரசு.

இந்த விவகாரம் கோர்ட்டுக்குச் செல்லவே, வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் இஸ்லாத் சட்டப்படி கட்டாயமில்லை என்று தெரிவித்தோடு, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை யாரும் அணியக்கூடாது என்று உத்தரவிட்டது. ஆனாலும், கோர்ட் மற்றும் மாநில அரசின் உத்தரவுகளை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் மதிக்கத் தயாராக இல்லை. வேண்டுமென்றே ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களை கல்வி நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்பதால், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா என நாள்தோறும் ஏதேனும் ஒரு வகையில் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

எனவே, இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடும் மாணவிகளை கல்வி நிறுவன நிர்வாகங்கள் சஸ்பெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில், மங்களூருவில் உள்ள உப்பினங்கடி அரசு முதல் தரக் கல்லூரியில், ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் 23 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கெனவே, இதேபோல 6 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it