செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு… ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல், கார் கண்ணாடிகள் உடைப்பு: தி.மு.க. அராஜகம்!

செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு… ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல், கார் கண்ணாடிகள் உடைப்பு: தி.மு.க. அராஜகம்!

Share it if you like it

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், தகவலறிந்து வந்த தி.மு.க.வினர் அதிகாரிகளை தாக்கியதோடு, கார் கண்ணாடிகளையும் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இன்று காலை இவருக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். இத்தகவல் தி.மு.க.வினர் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவியது. உடனே, சம்பவ இடத்தில் குவிந்த தி.மு.க. வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிகாரிகள் வந்த காரின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.


Share it if you like it