காஷ்மீர் பண்டிட்களை இழிவுபடுத்திய கெஜ்ரிவால்!

காஷ்மீர் பண்டிட்களை இழிவுபடுத்திய கெஜ்ரிவால்!

Share it if you like it

நாடு முழுவதும் சமீபத்தில் வெளியாகி ரிலீஸாகிய திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படம் குறித்து கிண்டல் செய்யும் விதமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜம்மு காஷ்மீரில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட்கள், உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது விவரிக்கிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. அதேசமயம் மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் என மிகப் பெரிய ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது.

இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், லோக்கல் போலீஸாரை விரட்டி விட்டு, ராணுவ வீரர்களைப் போல உடையணிந்து வந்து, பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம். தைரியமாக வெளியே வாருங்கள் என்று நம்ப வைத்து, வெளியில் வரும் பண்டிட்களை கொடூரமாக சுட்டுக் கொல்கிறது இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல். எங்கு பார்த்தாலும் ரத்தம் ரத்தம். ஆனால், படத்துக்கு ஏ சர்டிபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, இந்தக் காட்சிகளை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. இதனால், காஷ்மீரை விட்டு பரிதாபமாக வெளியேறி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று வரை அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் படத்தை பார்த்துவிட்டுத்தான் ஏராளமான ஹிந்துக்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்த காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண், இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் காண்போர் கண்களை குளமாக்கியது. இப்படத்துக்கு ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வரி விலக்கு அளித்தி இருந்தன.

அந்த வகையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பலர் டெல்லி முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் வரிவிலக்கு வேண்டும் என்றால், யூ டியூப்பில் வெளியிடுங்கள் என்று நக்கலாக சட்டசபையில் பதில் அளித்து சிரித்துள்ளார். முதல்வரின் இந்த கருத்தை கேட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பல கொடுமைகளை, அனுபவித்த ஹிந்து பண்டிகள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது, நாடு முழுவதிலுமிருந்து டெல்லி முதல்வருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதனை தொடர்ந்து, குஜராத் பா.ஜ.க இளைஞர் அணியை சேர்ந்தவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் உருவப்படத்தை கொளுத்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


Share it if you like it