காரில் தேசியக்கொடி: கலை இயக்குனர் மீது தாக்குதல்!

காரில் தேசியக்கொடி: கலை இயக்குனர் மீது தாக்குதல்!

Share it if you like it

கேரளாவில் காரில் தேசியக்கொடியைக் கட்டிச் சென்ற கலை இயக்குனர் மீது ஒரு மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய விவரம், 5 நாட்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் அர்கன் எஸ்.வர்மா. கலை இயக்குனரான இவர், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி காலை காரில் தேசியக்கொடியை கட்டிக் கொண்டு தனது கடைக்குச் சென்றிருக்கிறார். பின்னர், அன்று இரவு தனது நண்பருடன் வீடு நோக்கி காரில் திரும்பி இருக்கிறார். அப்போது, அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல், வர்மாவின் காரை வழி மறித்து நிறுத்தி இருக்கிறது. வர்மா காரை நிறுத்தியம், காரில் பொருத்தி இருந்த தேசியக்கொடியை அகற்றுமாறு அக்கும்பல் கூறியிருக்கிறது. இதற்கு வர்மா மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், வர்மா மற்றும் அவரது நண்பரிடம் தகராறு செய்திருக்கிறது. மேலும், வர்மாவை காரில் இருந்து கீழே இழுத்துப்போட்டு சரமாரியாகத் தாக்கிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்று விட்டது. இதில், தலை, மூக்கு மற்றும் கழுத்து ஆகிய பகுதியில் பலத்த காயம் மற்றும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், கழுத்துப் பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டதால், வர்மாவால் பேசமுடியவில்லை. பின்னர், சிறிது நேரம் கழித்து வந்த ரோந்து போலீஸார், வர்மாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வர்மாவால் இன்றுதான் பேசமுடிந்தது.

இதையடுத்து, கொல்லம் போலீஸார் வர்மாவிடம் வாக்குமூலம் பெற்று, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யார் என்பது குறித்த தகவலை போலீஸார் வெளியிடவில்லை. காரில் தேசியக்கொடியை கட்டிச் சென்றதற்காக கலை இயக்குனர் ஒருவர் கேரளாவில் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி வருகிறது என்று ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் சமீபகாலமாக குற்றம்சாட்டி வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் இச்சம்பவம் அமைந்திருக்கிறது.


Share it if you like it