முல்லை பெரியாறு அணையின் உரிமையை கேரளாவிடம் விட்டு கொடுத்த தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
முல்லை பெரியாறு அணையின் உரிமை முழுவதும் தமிழக அரசிடம் மட்டுமே உள்ளது. அணையில் இருந்து நீரை திறந்து விட வேண்டும் என்றால், தேனி கலெக்டர், அமைச்சர், மற்றும் மூத்த அதிகாரிகள் அதே போன்று கேரள அரசின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மட்டுமே அணையை திறக்க வேண்டும் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்தே.
ஆனால் கேரள கம்யூனிஸ அரசு தமிழக முதல்வரிடம் கலந்து ஆலோசிக்காமல்., சுயமாக இம்முடிவினை எடுத்து இருப்பது. தேனி விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கோவத்தையும், ஏற்படுத்தியுள்ளது. 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இன்று வரை முல்லை பெரியாறு அணை இருந்து வருகிறது என்பது நிதர்சனம்.
ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள அரசிடம் நம் உரிமைகளை முற்றிலும் இழந்து, ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் மிகப் பெரிய தலை குனிவை ஏற்படுத்தி விட்டார். பேபி அணை அருகே உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுக்கும் முன்பே நன்றி தெரிவித்தார் ஸ்டாலின். ஆனால் கேரள அரசு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லையே என்று கூறியிருப்பது வெட்கப்பட வேண்டிய செயல் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காட்டமாக கீழ்கண்ட காணொளியில் ஸ்டாலின் செய்த தவறை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
விருது கொடுக்கவே இல்லையே, பின் அவர் எப்படி விருதை திருப்பி கொடுப்பார்? Metoo சிகரத்திடம் கேள்வி எழுப்பிய ஓ.என்.வி..!