இதுதான்டா ‘மலபார்’ போலீஸ்..!

இதுதான்டா ‘மலபார்’ போலீஸ்..!

Share it if you like it

தன்னை பட்டாக் கத்தியால் வெட்ட வரும் ரவுடியை, ஒரு போலீஸ் அதிகாரி அசால்ட்டாக வெறும் கையாலேயே மடக்கிப் பிடிக்கும் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் போலீஸ் வாகனம் ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அப்போது, ஒரு இடத்தில் பச்சைக் கலர் சட்டை, கைலி அணிந்த ஒருவர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார். சரியாக போலீஸ் ஜீப் அந்த இடத்தில் வந்து நிற்கிறது. பிறகு அந்த இடத்தில் நின்று கொண்டிருக்கும் சிலரிடம் ஜீப்பில் அமர்ந்திருந்தபடியே ஏதோ விசாரிக்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. இதைக் கண்ட அந்த பச்சைக் கலர் சட்டை அந்த நபர், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு எஸ்கேப்பாக முயல்கிறார். இதனால் சந்தேகமடைந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த நபரின் வாகனம் செல்லாதவாறு தடுத்து சாலையில் ஓரம்கட்டி ஜீப்பை நிறுத்துகிறார்.

பின்னர், ஜீப்பிலிருந்து இறங்கி வருகிறார் அந்த போலீஸ் அதிகாரி. இதைக் கண்டதும் அந்த பச்சைக் கலர் சட்டை நபர், தன்னைத்தான் பிடிக்க வந்திருக்கிறாரோ என்று கருதி, தனது வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து அந்த போலீஸ் அதிகாரியை தாக்க முற்படுகிறார். ஆனாலும், கிஞ்சித்தும் அச்சப்படவில்லை அந்த போலீஸ் அதிகாரி. கையில் லேசான வெட்டுக்காயம் பட்ட நிலையிலும்கூட, அந்த பச்சைக் கலர் சட்டை அணிந்த நபரை பிடித்து கீழே தள்ளி, கத்தியை பிடுங்குகிறார். இதைக் கண்ட போலீஸ் ஜீப் டிரைவர் விரைந்து ஓடி வந்து கத்தியை வாங்குகிறார். பின்னர், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற உதவுகிறார்கள். அத்துடன் வீடியோ முடிகிறது. இதை அங்கு நின்றிருந்த யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ வைரலான நிலையில், தமிழக காவல்துறையில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் பார்வையிலும் பட்டிருக்கிறது. இதையடுத்து, மேற்கண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் எஸ்.பி. விஜயகுமார், ’’துணிச்சலான காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள். சமூகம்/தேசத்தின் சேவையில்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருவதுடன் மேற்கண்ட போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it