பா.ஜ.க.வில் பிபின் ராவத் தம்பி!

பா.ஜ.க.வில் பிபின் ராவத் தம்பி!

Share it if you like it

மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்து மறைந்த பிபின் ராவத்தின் தம்பி பா.ஜ.க.வில் இணைந்திருப்பது உத்தரகாண்ட் மாநில தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நம் பாரத நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். இவர், தமிழகத்துக்கு வந்திருந்தபோது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், தனது மனைவியுடன் வீரமரணம் அடைந்தார். இந்த விபத்து குறித்து சில விஷமிகள் வழக்கம் போல பல்வேறு கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டனர். எனினும், அந்த புளுகு மூட்டைளை யாரும் நம்பத் தயாராக இல்லை. இந்த நிலையில்தான், பிபின் ராவத்தின் தம்பி அஜய் ராவத் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.

அதாவது, எதிர்வரும் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் உத்தரகாண்ட் மாநிலமும் ஒன்று. இங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும்தான் போட்டியே. எனவே, வேட்பாளர் தேர்தல், பிரசாரம் என இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜ.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய நன்கு அறிமுகமான முகம் தேவை என்று அக்கட்சி தலைமை கருதியது. இந்த நிலையில்தான், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்னல் அஜய் ராவத் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.

டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த அஜய் ராவத்தை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது. இது பா.ஜ.க.வுக்கு கைகொடுக்கும் என்பது அரசியல் பார்வையாளர்ளின் கருத்து. ஏற்கெனவே, இம்மாநிலத்தில் பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மீடியாக்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், அஜய் ராவத் இணைந்திருப்பது பா.ஜ.க.வுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்கிறார்கள்.


Share it if you like it